சிறுவனின் மரணத்தில் தொடரும் மர்மம்: பெற்றோரை அடுத்து தாத்தா பாட்டி கைது

சிறுவனின் மரணத்தில் தொடரும் மர்மம்: பெற்றோரை அடுத்து தாத்தா பாட்டி கைது

1 mins read
a31751cd-7b0f-4b0f-a647-d7050032f27f
மதியிறுக்க நோயால் பாதிக்கப்பட்ட ஆறு வயதுச் சிறுவன் கொல்லப்பட்டது தொடர்பில் அவரின் பெற்றோரை அடுத்து அவரின் தாத்தா பாட்டியும் கைது செய்யப்பட்டுள்ளனர். - படம்: த ஸ்டார்

பெட்டாலிங் ஜெயா: ‘ஆட்டிசம்’ அதாவது மதியிறுக்க நோயால் பாதிக்கப்பட்ட ஆறு வயதுச் சிறுவன் ஸேய்ன் ரேய்யன் அப்துல் மத்தீன் கொல்லப்பட்டதை அடுத்து அச்சிறுவனின் தாத்தா பாட்டி கைது செய்யப்பட்டுள்ளனர்.

இருவரும் ஜூன் 12ஆம் தேதி தடுப்புக்காவலில் வைக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

முன்னதாக சிறுவனின் பெற்றோரும் கைது செய்யப்பட்டனர். அவர்களின் தடுப்புக்காவலுக்கான காலம் ஜூன் 13ஆம் தேதியோடு முடிவடைந்தது.

ஸேய்ன் ரேய்யன் டாமான்சாரா டாமாய் பகுதியில் காணாமல் போனதாக 2023ஆம் ஆண்டு டிசம்பர் 5ஆம் தேதி புகார் அளிக்கப்பட்டது.

மறுநாள், சிறுவனின் உடல் அவரது வீட்டுக்குச் சுமார் 200 மீட்டர் தொலைவில் இருந்த ஓடைக்கு அருகே கண்டுபிடிக்கப்பட்டது.

சிறுவனின் கழுத்திலும் உடலிலும் காயங்கள் இருந்ததாக உடற்கூறு ஆய்வுச் சோதனையில் தெரியவந்தது. இதனால் சிறுவன் கொலை செய்யப்பட்டதாகச் சந்தேகம் எழுந்துள்ளது.

அதையடுத்து, சிறுவனின் பெற்றோர் கைது செய்யப்பட்டனர். தங்களின் மகனின் கொலை தொடர்பாக சந்தேக நபர்களாகத் தாங்கள் கைது செய்யப்படுவர் என்பதைச் சிறுவனின் பெற்றோர் எதிர்பார்க்கவில்லை என்று கூறப்பட்டது.

இந்நிலையில், கொலைக் குற்றச்சாட்டுக்குப் பதிலாக, பிள்ளையைப் பார்த்துக்கொள்வதில் கவனக்குறைவுடன் இருந்ததாகச் சிறுவனின் பெற்றோர் மீது குற்றம் சுமத்த அரசுத் தரப்பு வழக்கறிஞர்கள் முடிவெடுத்துள்ளனர்.

இதற்கிடையே, சிறுவனுக்காக நீதி வேண்டும் என்ற ஆர்வத்தில் உள்ள மலேசியர்களிடம் பொறுமை காக்குமாறு சிறுவனின் தந்தையின் வழக்கறிஞர் கேட்டுக்கொண்டுள்ளார்.

குறிப்புச் சொற்கள்