தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ஞாயிற்றுக்கிழமை (ஜனவரி 4) கிரீஸ் நாட்டில் உள்ள விமான நிலையங்கள் அனைத்தும் முடங்கின.
விமானங்கள் தரையிறங்கவில்லை. அதேபோல் புறப்படவும் இல்லை.
வானொலி அலைவரிசையில் ஏற்பட்ட பிரச்சினையால் விமான நிலையங்கள் பாதிக்கப்பட்டதாகக் கிரேக்க விமான ஆணையமும் கிரேக்க அரசாங்கத்தின் தொலைக்காட்சியும் தெரிவித்தன.
இதுகுறித்து விசாரணை நடத்தி வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
காலை 9 மணிக்குத் தொடங்கிய பிரச்சினை மாலை 4 மணிவரை தொடர்ந்தது. இதனால் ஆயிரக்கணக்கான பயணிகள் பாதிக்கப்பட்டனர்.

