புகைமூட்டத்துடன் தொடர்புடைய நிறுவனங்களுக்கு அழுத்தம் தர பசுமைச் சான்றிதழ் பொருள்களை வாங்கலாம்

புகைமூட்டத்துடன் தொடர்புடைய நிறுவனங்களுக்கு அழுத்தம் தர பசுமைச் சான்றிதழ் பொருள்களை வாங்கலாம்

படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

20 Oct 2026 - 8:24 pm

1 mins read

சிங்கப்பூரில் புகைமூட்டத்தால் பாதிக்கப்பட்டுள்ளோர் இந்தோனீசியாவில் தீயை அணைக்கும் பணியில் நேரடியாக ஈடுபட முடியாது என்றாலும் தங்களது வாங்கும் திறனின் மூலம் தீ மூட்டுவதற்குப் பொறுப்பான வரம்புமீறும் நிறுவனங்களுக்கு அழுத்தம் கொடுக்க முடியும் என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

நிறுவனம் நிலத்தைப் பயன்படுத்தி பயிரீடு செய்யும்போது தீ மூட்டும் முறையைக் கையாளவில்லை என்பதையும் அது நிலையான நிலப் பயன்பாட்டு முறைகளைப் பின்பற்றுகிறது என்பதையும் பசுமைச் சான்றிதழ் சுட்டிக்காட்டுகிறது. எனவே, இத்தகைய பசுமைச் சான்றிதழ் இல்லாத நிறுவனங்களின் பொருள்களைப் பயனீட்டாளர்கள் புறக்கணிக்க வேண்டும் என்று கூறப்படுகிறது.

திங்கட்கிழமையன்று (அக்டோபர் 19) ஆசியா பல்ப் அண்ட் பேப்பர் நிறுவனத்துக்கு வழங்கப்பட்டுள்ள பசுமைச் சான்றிதழின்மீது தற்காலிகக் கட்டுப்பாடுகளை விதித்து சிங்கப்பூர் சுற்றுப்புற மன்றம் ஆணை பிறப்பித்தது.

சிங்கப்பூர் சந்தையில் காகிதப் பொருள்களை விற்பனை செய்துவரும் இந்தோனீசியாவின் ஆகப் பெரிய காகித உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றான ஆசியா பல்ப் அண்ட் பேப்பர், புகைமூட்டத்துடன் தொடர்புடைய நடவடிக்கைகளில் ஈடுபட்டதற்காகச் சிங்கப்பூர் அரசாங்கத்திடமிருந்து சட்ட அறிவிப்புகளைப் பெற்றுள்ள நான்கு நிறுவனங்களுடன் இணைக்கப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்
இந்தோனீசியாபுகைமூட்டம்பசுமை