அமெரிக்காவின் மினிசோட்டா நகரில் உள்ள ஒரு கடைத்தொகுதியில் இரு கும்பல்களுக்கிடையிலான வாக்குவாதம் மோசமடைந்து துப்பாக்கிச்சூடாக மாறியது. இதில் 19 வயது இளையர் மாண்டார்.
துப்பாக்கிச் சத்தத்தைக் கேட்டு கடைத்தொகுதியில் இருந்தவர்கள் பதறியடித்துக்கொண்டு அங்கிருந்து தப்பி ஓடினர்.
"கடைத்தொகுதியில் 16 காவல்துறை அதிகாரிகள் இருந்தனர். அப்படி இருந்தும் துப்பாக்கிச்சூடு நடந்திருக்கிறது. எனக்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை," என்று புளூமிங்டன் காவல்துறை தலைவர் பூக்கர் ஹோட்ஜஸ் கூறினார்.
ஏறத்தாழ 330 கடைகளுடன் 'மால் ஆஃப் அமெரிக்கா' கடைத்தொகுதி 1992ல் திறக்கப்பட்டது. அதில் 10,000க்கும் மேற்பட்டோர் வேலை செய்கின்றனர்.
அக்கடைத்தொகுதியைப் பொறுத்தமட்டில், உலகம் முழுவதிலிருந்து ஒவ்வோர் ஆண்டும் 40 மில்லியனுக்கும் அதிகமானோர் அங்கு வந்துசெல்கின்றனர்.
ஏறக்குறைய 500 சில்லறை விற்பனைக் கடைகளுடன், அக்கடைத்தொகுதியில் 19 முழுச்சேவை உணவகங்களும் உள்ளன.


