கோலா குராவ் வீட்டை நோக்கி ஐந்து முறை சுட்ட துப்பாக்கிக்காரர்

1 mins read
0e61169b-7ef0-4d8a-b1bd-ad02d573dbfd
படம்: - தமிழ் முரசு

ஈப்போ: கோலா குராவின் கோலா குலாவில் உள்ள வீடு ஒன்றை நோக்கி ஐந்து முறை துப்பாக்கியால் சுட்ட ஆடவரைக் காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

மோட்டார்சைக்கிளில் வந்த அந்த ஆடவர் வீட்டை நோக்கி செவ்வாய்க்கிழமை அதிகாலை மூன்று மணி அளவில் சுட்டதாக பேராக் காவல்துறைத் தலைமை ஆணையர் முகம்மது யுஸ்ரி ஹசான் பஸ்ரி கூறினார்.

கார், மோட்டார்சைக்கிள், வீட்டுச் சன்னல்கள் ஆகியவை சேதமடைந்ததாக அறிக்கை ஒன்றில் அவர் தெரிவித்தார். வீட்டுக்கு அருகில் 9 மில்லிமீட்டர் வகை துப்பாக்கித் தோட்டாக்களைக் கண்டதாகவும் அவர் சொன்னார்.

வீட்டில் இருந்த ஆறு பேரும் துப்பாக்கிச் சூட்டு சத்தத்தினால் எழுந்தனர். ஆனால் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றார் ஆணையர் முகம்மது யுஸ்ரி.

வீட்டு உரிமையாளர் 56 வயது விவசாய நடத்துனர் என்றும் அவர் தெரிவித்தார்.

சத்தத்தைக் கேட்டு அவர்களின் அண்டைவீட்டார் காவல்துறையைத் தொடர்புகொண்டதாக அவர் கூறினார்.

சம்பவத்துக்கான நோக்கத்தைக் கண்டறிய முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்