அமெரிக்காவின் டெக்சஸ் மாநிலத்தில் உள்ள ஹூஸ்டனில் குழந்தை உட்பட 5 பேர் துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
கொலையாளி அண்டைவீட்டுக்காரர் என்று நம்பப்படுகிறது.
அவர்களுக்கு வாக்குவாதம் ஏற்பட்டதாகவும் பின்னர் அது கொலைவரை சென்றுவிட்டதாகவும் முதற்கட்ட விசாரணை முடிவுகள் தெரிவிக்கின்றன.
மாண்டவர்களில் 8 வயதுக் குழந்தையும் அடங்கும். மாண்டவர்கள் அனைவரும் ஹோண்டுரஸ் நாட்டைச் சேர்ந்தவர்கள்.
குழந்தைகளை அணைத்தவாறே இரண்டு பெண்கள் மாண்டுகிடந்தனர். கொலையாளியிடம் இருந்து குழந்தைகளைக் காக்கும் நோக்கில் அப்பெண்கள் மாண்டிருக்கலாம் என்று நம்பப்படுகிறது.
சம்பவத்தில் இரண்டு குழந்தைகள் தப்பித்தனர்.
சந்தேகப் பேர்வழி மெக்சிகோவை சேர்ந்த 38 வயது ஆடவர். அவரைக் காவல்துறை அதிகாரிகள் தேடிவருகின்றனர்.
அவர் பக்கத்தில் உள்ள காட்டில் மறைந்திருக்கலாம் என்று அதிகாரிகள் கூறினர்.


