செத்தியா ஆலாம் துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்டவர் சுட்டுக்கொல்லப்பட்டார்

செத்தியா ஆலாம் துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்டவர் சுட்டுக்கொல்லப்பட்டார்

1 mins read
35071ae8-34c7-4360-a436-f5a1d859bb12
சந்தேகப் பேர்வழி சுட்டுக்கொல்லப்பட்ட ஹோட்டல் அறையிலிருந்து தோட்டாக்களுடன் கூடிய இரண்டு கைத்துப்பாக்கிகள் கைப்பற்றப்பட்டதாகச் சிலாங்கூர் காவல்துறை தலைவர் சொன்னார். - படம்: கூகல் வரைப்படம்

சிலாங்கூர்: மலேசியாவின் சிலாங்கூர் மாநிலத்தில் உள்ள செத்தியா அலாம் கடைத்தொகுதியில் துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்டதாகச் சந்தேகிக்கப்படும் நபர், கெத்தாம் தீவில் உள்ள ஹோட்டல் ஒன்றில் காவல்துறையினருடன் நடந்த துப்பாக்கிச்சூட்டில் சுட்டுக்கொல்லப்பட்டார்.

பிப்ரவரி 18ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) அதிகாலை 3 மணியளவில் சிலாங்கூர் மற்றும் புக்கிட் அமான் மத்திய காவல் தலைமையகத்தைச் சேர்ந்த குற்றப் புலனாய்வுத் துறை அதிகாரிகள் அடங்கிய குழு, ஹோட்டல் ஒன்றில் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டதாகச் சிலாங்கூர் காவல்துறை தலைவர் ஹுசைன் உமர் கான் தெரிவித்தார்.

அப்போது ஹோட்டல் அறையில் தங்கியிருந்த சந்தேக நபருடன் துப்பாக்கிச்சூடு நடந்ததாகவும் 30 வயதான அந்தச் சந்தேகப் பேர்வழி சுட்டுக்கொல்லப்பட்டதாகவும் அவர் மேலும் கூறினார்.

அந்த ஹோட்டல் அறையிலிருந்து தோட்டாக்களுடன் கூடிய இரண்டு கைத்துப்பாக்கிகள் கைப்பற்றப்பட்டதாகவும் அவர் சொன்னார்.

“துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த உள்ளூர்வாசியான அந்தச் சந்தேகப் பேர்வழிக்கு திருட்டு, போதைப்பொருள் தொடர்பான ஏழு குற்றங்களில் தொடர்பிருப்பதாகக் காவல்துறை பதிவுகள் காட்டுகின்றன. செத்தியா அலாம் கடைத்தொகுதியில் நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்திற்கு அவர்தான் காரணம் என்று நாங்கள் நம்புகிறோம்,” என்று திரு ஹுசைன் உமர் கான் கூறினார்.

குறிப்புச் சொற்கள்