பாகிஸ்தானில் துப்பாக்கிச்சூடு: ஏழு தொழிலாளர்கள் மரணம்

1 mins read
63ee3d79-10c1-4aa6-8513-6eb6005a9b11
தாக்குதலுக்கு இதுவரை யாரும் பொறுப்பேற்கவில்லை.  - படம்: பிக்சாபே

குவெட்டா: பாகிஸ்தானின் குவாடர் துறைமுகத்திற்கு அருகில் துப்பாக்கிக்காரர்கள் ஏழு தொழிலாளர்களைச் சுட்டுக்கொன்றதாக காவல்துறையினர் கூறியுள்ளனர்.

துப்பாக்கிக்காரர்கள் அந்தத் துறைமுக நகருக்கு ஏறக்குறைய 25 கிலோமீட்டர் கிழக்கில் உள்ள வீடு ஒன்றுக்குள் நுழைந்ததாக துறைமுக அதிகாரி மோசின் அலி தெரிவித்தார்.

அந்தத் துறைமுக நகரம் தென்மேற்கு பலுசிஸ்தான் மாநிலத்தில் அமைந்துள்ளது.

இதுவரை யாரும் அந்தத் தாக்குதலுக்குப் பொறுப்பேற்றுக்கொள்ளவில்லை.

பலுச் பிரிவினைவாதப் போராளிகள் கடந்தகாலத்தில் கிழக்கு பஞ்சாப் மாநிலத்தில் உள்ள தொழிலாளர்களை இலக்காகக் கொண்டிருந்தனர்.

சென்ற மாதம், பலுச் விடுதலை ராணுவம் பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த 9 தொழிலாளர்களின் கொலைக்குப் பொறுப்பேற்றுக்கொண்டது. அவர்கள் கடத்தப்பட்டு பின்னர் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

அந்த மாநிலத்தின் இயற்கை வளங்களில் அதிக பங்கைக் கோரி, அரசாங்கத்திற்கு எதிராக நீண்டகாலமாகப் பிரிவினைவாதிகள் போராடிவருகின்றனர்.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்