ஜிஎக்ஸ்எஸ் வங்கிக் குழுமத்தின் தலைமைச் செயலாளர் முத்துகிருஷ்ணன் பதவி ஓய்வு

2 mins read
வங்கியின் விரிவாக்கத்திற்கு அரும்பங்காற்றியவர் எனத் தலைவர்கள் புகழாரம்
ba53c623-0288-425d-8f25-d5d747f58750
புதிய தலைமை நிர்வாக அவை உறுப்பினர் திருவாட்டி பெய் சீ லாயுடன் திரு முத்துகிருஷ்ணன் ராமசாமி. - படம்: ஜிஎக்ஸ்எஸ்

ஜிஎக்ஸ்எஸ் வங்கிக் குழுமத்தின் தலைமைச் செயலாளர் முத்துகிருஷ்ணன் ராமசாமி, தம் பதவியிலிருந்து ஓய்வு பெறுகிறார்.

ஆயினும், திரு ராமசாமி தொடர்ந்து ஆலோசகராகச் செயல்படுவார் என்று அந்தக் குழுமம் தெரிவித்துள்ளது.

நிதி, தொழில்நுடப் மற்றும் செயலாக்க நிபுணரான திரு ராமசாமி, 35 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட அனைத்துலக அனுபவம் கொண்டுள்ளார். சிங்கப்பூர்ப் பங்குச்சந்தையில் 12 ஆண்டுகள், சிட்டிபேங்கில் 21 ஆண்டுகள், நெஸ்ட்லேயில் 3 ஆண்டுகள் உள்ளிட்டவை இவரது பணி அனுபவத்தில் அடங்கும்.

திரு ராமசாமிக்குப் பதிலாக திருவாட்டி பெய் சீ லாயைத் தலைமை நிர்வாக அவை உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார். ஜிஎக்ஸ்எஸ் வங்கியின் மலேசிய கிளை நிறுவனமான ஜிஎஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாகியாக இதுவரை செயலாற்றி வந்த திருவாட்டி லாய், புதிய பொறுப்பில் ஜூன் 1ஆம் தேதியிலிருந்து செயல்படுகிறார்.

திருவாட்டி லாயின் முன்னாள் பொறுப்பைத் திரு கெளஷிக் செளதரி ஏற்கவிருக்கிறார். பிப்ரவரி 2023ல் ஜிஎக்ஸ்எஸ் வங்கியில் சேர்ந்த திரு ராமசாமி தென்கிழக்காசியாவின் மின்னிலக்க வங்கியாக அதனை உருமாற்றுவதற்குத் துணையாக இருந்ததாகக் குறிப்பிட்டார்.

சிங்கப்பூரில் ஜிஎக்ஸ்எஸ் வங்கி, மலேசியாவில் ஜிஎக்ஸ் வங்கி ஆகியவற்றுடன் இந்தக் குழுமம், சூப்பர்பேங்குடன் அணுக்கமாகப் பணியாற்றி வருகிறது.

இந்தோனீசியாவில் மின்னிலக்க வங்கியாக இயங்கும் இந்தக் குழுமத்திலுள்ள பங்குதாரர்கள் கிரப்பிலும் சிங்டெல்லிலும் இணைந்துள்ளனர்.

ஜிஎக்ஸ்எஸ் வங்கியின் குழுமத் தலைமை நிர்வாகியாக உள்ள திரு ராமசாமி, அதன் வட்டார தொழில்நுட்ப, தரவு மற்றும் படைப்பு உருவாக்கத்தின் நிறைவை மேற்பார்வையிட்டார்.

“வட்டார வாடிக்கையாளர்களுக்குச் சேவையாற்றுவதற்காக எங்கள் வங்கிக் குழுமத்தின் பரப்பளவை விரிவாக்குவதற்குத் தேவைப்பட்ட வட்டாரத் திறன்களையும் உள்ளமைப்பையும் உருவாக்கத் துணைபுரிந்த ராமுவுக்கு நாங்கள் பெரிதும் நன்றிக்கடன்பட்டுள்ளோம்,” என்று ஜிஎக்ஸ்எஸ் வங்கியின் நிர்வாக அவைத்தலைவர் சியே ஃபூ ஹுவா தெரிவித்தார்.

“எங்கள் குழுமத்தை நம்பிக்கையுடன் முன்னெடுத்துச் செல்வதற்குத் தேவையான வலுவான தலைமைத்துவத்தை அவர் விட்டுச்செல்கிறார்,” என்றும் திரு சியே குறிப்பிட்டார்.

குறிப்புச் சொற்கள்