தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

பாதி பிரெஞ்சு மக்கள் அரசாங்கம் கவிழ விருப்பம்: கருத்தாய்வு

1 mins read
2f2737dc-c9e0-4e34-8c2f-6076fc46b946
பிரான்ஸ் பிரதமர் மிஷெல் பார்னியே. - படம்: ராய்ட்டர்ஸ்

பாரிஸ்: பிரான்சின் 53 விழுக்காட்டு மக்கள் அந்நாட்டின் பிரதமர் மிஷெல் பார்னியேவின் அரசாங்கம் கவிழ்வதை விரும்புகின்றனர் என்று கருத்தாய்வு ஒன்றில் தெரிய வந்துள்ளது.

பிரான்சின் சட் ரேடியோ (Sud Radio) வானொலிக்காக இஃபொப்-ஃபிடூ‌ஷியல் (Ifop-Fiducial) அமைப்பு நடத்திய கருத்தாய்வில் இந்த விவரம் தெரிய வந்தது. கருத்தாய்வின் முடிவுகள் வியாழக்கிழமையன்று (நவம்பர் 28) வெளியிடப்பட்டன.

திரு பார்னியே பரிந்துரைத்திருக்கும் வரவுசெலவுத் திட்டம் தொடர்பில் அவரின் அரசாங்கம் மீது மக்கள் கோபம் கொண்டிருப்பதால் இந்நிலை உருவாகியுள்ளதாகக் கருத்தாய்வில் தெரிய வந்துள்ளது.

திரு பார்னியேவை எதிர்க்கும் இடது சாரி, பெரும் வலது சாரியினர் நம்பிக்கையில்லா தீர்மான வாக்கெடுப்பை நடக்கச் செய்தால் அவர் கிறிஸ்துமஸ் தினத்துக்கு முன்பு அல்லது அடுத்த வாரத்துக்குள்ளேயே ஆட்சியை இழக்கக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நம்பிக்கையில்லா தீர்மான வாக்கெடுப்பில் திரு பார்னியே அநேகமாகத் தோல்வியடைவார் என்று அரசியல் தரப்பிலிருந்து பலர் கூறியுள்ளனர்.

இஃபொப்-ஃபிடூ‌ஷியல் கருத்தாய்வு, செவ்வாய், புதன்கிழமைகளில் (26, 27 நவம்பர்) 1,006 பேரைக் கொண்டு நடத்தப்பட்டது.

அதேபோல் புதன்கிழமையன்று பிஎஃப்எம் டிவி (BFM TV) தொலைக்காட்சிக்காக இலேப் (Elabe) அமைப்பு நடத்திய கருத்தாய்வில் பங்கேற்றோரில் 63 விழுக்காட்டினர், திரு பார்னியேவின் அரசாங்கம் கவிழ்ந்தால் அதிபர் இமேனுவெல் மெக்ரான் பதவி விலகவேண்டும் என்று தெரிவித்திருந்தனர்.

குறிப்புச் சொற்கள்