கைரோ: பாலஸ்தீனத்தின் ஹமாஸ் குழு, புதிய நிபந்தனைகளின்று இஸ்ரேலுடன் உடனடிச் சண்டைநிறுத்தத்தை காஸாவில் நடைமுறைப்படுத்தத் தயார் என்று கூறியிருக்கிறது.
மூத்த அதிகாரி கலில் அல்-ஹயா வழிநடத்திய தனது பேச்சாளர் குழு, செப்டம்பர் 11ஆம் தேதி கத்தார் பிரதமர் ஷேக் முகம்மது அப்துல்ரஹ்மான் அல் தானி, எகிப்தின் வேவுத் துறைத் தலைவர் அப்பாஸ் கமெல் உள்ளிட்டவர்களைச் சந்தித்ததாக ஹமாஸ் தெரிவித்தது.
காஸாவில் உள்ள ஆக அண்மைய நிலவரத்தைப் பற்றிக் கலந்துபேச அவர்கள் சந்தித்தனர். 11 மாதப் போரை முடிவுக்குக் கொண்டுவரும் உடன்படிக்கையை எட்ட இதுவரை நடத்தப்பட்ட பேச்சுகள் தோல்வியில் முடிந்துள்ளன.
இந்நிலையில், அடுத்த சில நாள்களில், மேலும் விரிவான சண்டைநிறுத்தப் பரிந்துரை முன்வைக்கப்படும் என்று செப்டம்பர் 7ஆம் தேதி அமெரிக்காவின் மத்தியப் புலனாய்வு அமைப்பின் இயக்குநர் வில்லியம் பர்ன்ஸ் கூறினார்.