மாடியில் இருந்து விழுந்த சிறுவனின் உடல்நிலை சீராகவுள்ளது

மாடியில் இருந்து விழுந்த சிறுவனின் உடல்நிலை சீராகவுள்ளது

1 mins read
90e8a27a-dc3a-4581-ada2-5ba2ce654b1e
சிறுவன் கீழே விழுந்த சம்பவம் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.  - படம்: ஃபேஸ்புக்

கோலாலம்பூர்: பினாங்கின் லெபூ துங்கு குடின் பகுதியில் உள்ள ஒரு கூட்டுரிமை வீட்டின் 12வது மாடியில் இருந்து நான்கு வயது சிறுவன் சனிக்கிழமை (அக்டோபர் 26) கீழே விழுந்தான்.

அதன் பின்னர் தனியார் மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டான் சிறுவன்.

தற்போது அந்த சிறுவனின் உடல்நிலை சீராக உள்ளதாகவும் அவசர சிகிச்சைப் பிரிவில் 48 மணி நேரம் கண்காணிப்பில் இருப்பதாகவும் சிறுவனின் பெற்றோர் தெரிவித்தனர்.

சனிக்கிழமை இரவு 9.20 மணிவாக்கில் சிறுவன் கீழே விழுந்தான். அதில் அவனுக்கு கடுமையான காயங்கள் ஏற்பட்டன.

12வது மாடி படுக்கை அறையின் சன்னலில் இருந்த வெளியே குதித்த சிறுவன் ஏழாவது மாடியின் திட்டில் விழுந்தான்.

சிறுவன் கீழே விழுந்த சம்பவம் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

குறிப்புச் சொற்கள்