தென்கொரியாவில் வெப்ப அலைக்கு 19 பேர் பலி

தென்கொரியாவில் வெப்ப அலைக்கு 19 பேர் பலி

1 of 2
படம்: ராய்ட்டர்ஸ்
படம்: ஏஎஃப்பி

04 Aug 2026 - 5:37 pm

1 mins read

சோல்: தென்கொரியாவை வாட்டி வதைத்து வரும் வரலாறு காணாத வெப்ப அலையால் 19 பேர் உயிரிழந்துள்ளனர்.

வெப்பத் தாக்கத்தை தேசியப் பேரிடராக அதிபர் லீ ஜே மியுங் செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 4) அறிவித்துள்ளார்.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு விரைவாக உதவிகளை வழங்குமாறு அவர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

அமைச்சரவைக் கூட்டத்தில் பேசிய அதிபர் லீ, குளிர்சாதனப் பயன்பாடு அதிகரித்துள்ளதால் மின் விநியோக முறைகளை ஆய்வு செய்யவும் மக்களின் அன்றாட வாழ்க்கையைப் பாதுகாக்கவும் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு வலியுறுத்தினார்.

“இத்தகைய தீவிர வானிலை இயல்புநிலையாகி வருவதால், நாட்டின் அவசரகால நெருக்கடி மேலாண்மை அமைப்பை முழுமையாக மறுசீரமைக்க வேண்டும்,” என்றும் அவர் கூறினார்.

ஆகஸ்ட் 2ஆம் தேதி யாங்சான் நகரில் 42.5 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவானதாக தென்கொரியாவின் வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டது.

இது கடந்த 122 ஆண்டுகளில் பதிவான மிக அதிகபட்ச வெப்பநிலையாகும்.

கடந்த திங்கட்கிழமை (ஆகஸ்ட் 3) தலைநகர் சோலிலும் அதைச் சுற்றியுள்ள கெயோங்கி வட்டாரத்திலும் நாட்டின் முதல் தீவிர வெப்ப அலை எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

தற்போது தலைநகர் முழுவதற்கும் அந்த எச்சரிக்கை நீட்டிக்கப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்
உலகம்சோல்தென்கொரியாவெப்பநிலைவெப்ப அலைஉயிரிழப்புமரணம்