தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ஷன்ஷன் சூறாவளியால் ஜப்பானில் கனமழை

1 mins read
68dc910b-8c9f-45ba-9ed3-f26d264b6d98
ஃபுகுவோகாவில் ஆகஸ்ட் 30ஆம் தேதி ஷன்ஷன் சூறாவளியால் கனமழை பெய்யும் நிலையில் வெள்ளம், நிலச்சரிவு குறித்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. - படம்: ராய்ட்டர்ஸ்
multi-img1 of 2

ஃபுகுவோகா: ஜப்பானின் பெரும்பாலான பகுதிகளில் ஆகஸ்ட் 30ஆம் தேதி ஷன்ஷன் சூறாவளியால் கனமழை பெய்துவருகிறது.

சூறாவளி மையம் கொண்டுள்ள இடத்திலிருந்து நூற்றுக்[Ϟ]கணக்கான கிலோமீட்டர் தொலைவு வரை வெள்ள அபாயம், நிலச்சரிவு குறித்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கனமழையோடு பலத்த காற்றும் வீசுவதால் போக்குவரத்து நிலைக்குத்தியுள்ளது. தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளன.

தென்மேற்குப் பகுதியான கியுஷுவில் ஏற்பட்ட ஆக மோசமான சூறாவளிகளில் ஒன்றான ஷன்ஷன் சூறாவளியால் ஆகஸ்ட் 29ஆம் தேதி முதல் அந்தப் பகுதி வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

ஃபுகுவோகா நகரில் ரயில் சேவை நிறுத்தப்பட்டதால் வேலை நிமித்தமாக வெளியூர்களிலிருந்து அங்கு வந்துள்ள பயணிகள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

சூறாவளியின் பாதை, கணிக்க இயலாத வகையில் தொடர்ந்து மாறிகொண்டே இருப்பதால் போக்குவரத்து நிலவரம் எப்போது சரியாகும் என்று தெளிவாகத் தெரியவில்லை.

இச்சூறாவளியால் மூவர் மாண்டதாகவும் மேலும் 78 பேர் காயமடைந்ததாகவும் பேரிடர் நிர்வாக அமைப்பு தெரிவித்தது.

ஷன்ஷன் சூறாவளியால் மணிக்கு 180 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசுவதாகவும் தற்போது அது வடகிழக்குத் திசை நோக்கி நகர்வதாகவும் கூறப்பட்டது.

கியுஷுவின் ஏழு பகுதிகளில் ஏறக்குறைய 125,000 வீடுகளுக்கு மின்விநியோகம் தடைபட்டுள்ளது.

புயல் மையம் கொண்டுள்ள பகுதியிலிருந்து வெகு தொலைவு வரை கனமழை பெய்வதால் அதிகாரிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேறத் தயாராக இருக்கும்படி மில்லியன்கணக்கான குடியிருப்பாளர்களுக்கு ஆலோசனை கூறப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்