கோலாலம்பூர்: சரவாக் மாநிலத்தின் சில பகுதிகளில் திங்கட்கிழமை (ஜனவரி 20) வரை தொடர்ந்து கனமழை பெய்யும் என்று மலேசிய வானிலை ஆய்வுத் துறை (மிட்மலேசியா) எச்சரிக்கை விடுத்துள்ளது.
கூச்சிங், செரியான், சிபு, பெத்தோங் போன்றவை அவற்றில் அடங்கும்.
சிபுவின் சிரி அமான், கபிட் போன்ற பகுதிகளுக்கு விழிப்பு நிலை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஜோகூர் மாநிலத்திலும் மெர்சிங், கூலாய், கோத்தா திங்கி, ஜோகூர் பாரு போன்ற இடங்களுக்கு இன்று கனமழை தொடர்பில் விழிப்பு நிலை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் அண்மைய வானிலை நிலவரம் குறித்த தகவல்களுக்கு ‘மிட்மலேசியா’வின் அதிகாரபூர்வ இணையத்தளம், அதன் அதிகாரபூர்வ சமூக ஊடகப் பக்கங்கள், ‘மைகுவாகா’ கைப்பேசிச் செயலி ஆகியவற்றை நாடும்படி ஆலோசனை கூறப்பட்டுள்ளது.
மேல்விவரங்களுக்கு 1300 22 1638 என்ற நேரடித் தொலைபேசி எண்ணை நாடும்படி அவர்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.