தைப்பே: தைவானில் பெய்த கனமழை காரணமாக நால்வர் மாண்டுவிட்டதாகவும் 5,900க்கும் மேற்பட்டோர் தங்கள் வசிப்பிடங்களிலிருந்து வெளியேற்றப்பட்டு விட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.
ஓர் ஆண்டில் பெய்ய வேண்டிய மழை கடந்த ஒரு வாரத்தில் பெய்ததாக அந்நாட்டு அதிகாரிகள் கூறினர். இதன் விளைவாக நிலச்சரிவுகளும் வெள்ளமும் ஏற்பட்டன.
ஜூலை மாத இறுதியிலிருந்து தைவானின் தென்பகுதியில் ஏற்பட்ட வெள்ளம், நிலச்சரிவு காரணமாக மூவரைக் காணவில்லை, 77 பேர் காயமடைந்தனர்,
டானாஸ் புயலாலும் அண்மையில் பெய்த கனமழையாலும் தைவானின் தென்பகுதியில் உள்ள தைனான் நகரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டது. அங்குள்ள மக்களை தைவானியப் பிரதமர் சோ ஜுங் தாய் திங்கட்கிழமை (ஆகஸ்ட் 4) சந்தித்துப் பேசினார்.
நிவாரணப் பணிகளுக்குத் தேவையான சிறப்பு நிதி ஒதுக்குவது தொடர்பாக தைவானிய அமைச்சரவை முயற்சிகள் மேற்கொண்டு வருவதாக அவர் கூறினார்.