தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

பள்ளி விடுமுறை காலத்தில் எல்லைகளில் போக்குவரத்து நெரிசல்: ஐசிஏ

1 mins read
0c19beb0-df23-4082-ab3e-9b3888e08b80
மத்திய கிழக்கு பூசலின் காரணமாக குடிநுழைவு வளாகங்களில் பாதுகாப்பு நடவடிக்கைகள் இரட்டிப்பாக்கப்பட்டுள்ளது என்று குடிநுழைவு சோதனைச் சாவடி ஆணையம் (ஐசிஏ) அறிவித்துள்ளது. - படம்: பெரித்தா ஹரியான்

பள்ளி விடுமுறை விரைவில் தொடங்கவிருப்பதால் உட்லண்ட்ஸ், துவாஸ் ஆகிய இரு சோதனைச் சாவடிகளிலும் அதிக போக்குவரத்தை எதிர்பார்க்கும்படி சிங்கப்பூர் குடிநுழைவு, சோதனைச் சாவடி ஆணையம் புதன்கிழமை (நவம்.16) கூறியது. இந்த நெரிசலை 16 நவம்பர் வியாழக்கிழமை முதல் விடுமுறைக் காலமான 2024 ஜனவரி 2 வரை எதிர்பார்க்கலாம் என்றும் ஐசிஏ தெரிவித்தது.

குறிப்பாக வார இறுதிகளில் பயணிகள் குடிநுழைவு சோதனைகளை முடிக்க கூடுதல் நேரத்தை ஒதுக்க வேண்டும். எனவே, போக்குவரத்து விதிமுறைகளைக் கடைப்பிடித்து, பணியில் இருக்கும் அதிகாரிகளின் வழிகாட்டுதலைப் பின்பற்றி, சாலைத் தடங்களை மீறாமல் சோதனைச் சாவடிகளைக் கடக்குமாறு ஐசிஏ கேட்டுக்கொண்டது.

மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பு ஏற்பாடுகளை கருத்தில்கொண்டு, சிங்கப்பூரின் சோதனைச் சாவடிகளைப் பயன்படுத்துவோர், இஸ்ரேல் ஹமாஸ் போர் சார்ந்த எந்தவித உடைகள், விளம்பரப் பொருள்கள், கொடிகள் ஆகியவற்றை பொதுவில் அணியவோ, வெளிப்படுத்தவோ கூடாது.

அதிகாரபூர்வ அனுமதியின்றி வெளிநாட்டு தேசிய முத்திரைகளை பொதுவெளியில் பயன்படுத்துவது வெளிநாட்டு தேசிய சின்னங்கள் (1949) காட்சிக் கட்டுப்பாட்டு சட்டத்தின்படி குற்றமாகும். இந்தச் சட்டத்தை மீறுவோர் மீது சிங்கப்பூருக்குள் நுழைவதற்கு தடைவிதிக்கும் தண்டனை உட்பட கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஐசிஏ வலியுறுத்தியது.

குறிப்புச் சொற்கள்