தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

மலேசியாவில் தீப்பிடித்த ஹெலிகாப்டர்; ஒருவர் உயிரிழப்பு

1 mins read
b48bab62-580d-4705-a9a6-4920e5a8a481
சம்பவம் வியாழக்கிழமை (பிப்ரவரி 6) காலை நேர்ந்தது. - படம்: தி ஸ்டார் / ஏ‌ஷியா நியூஸ் நெட்வோர்க்

கோலாலம்பூர்: மலேசியாவின் பாஹாங் மாநிலத்தின் ஜாலான் லாமா கோலாலம்பூர்-பெந்தோங் பகுதியில் ஹெலிகாப்டர் ஒன்று தரையிறங்கும்போது தீப்பிடித்துக்கொண்டது.

பெல் 206எல்-4 லாங் ரேஞ்சர் (Bell 206L-4 Long Ranger) வகை ஹெலிகாப்டர் தரையிறங்கும்போது அச்சம்பவம் நேர்ந்தது. அதில் ஒருவர் உயிரிழந்தார், ஒருவர் மீட்கப்பட்டார்.

பெந்தோங் நகரில் உள்ள வெந்நீரூற்றுக்கு அருகே ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது. மின்கம்பிகளை வேரிடத்துக்குக் கொண்டு சென்றபோது அந்த ஹெலிகாப்டர் தீப்பிடித்து முழுமையாக அழிந்துபோனது.

தரையிறங்க முயற்சி செய்தபோது தீ மூண்டதாக முதலில் வெளியான தகவல்கள் குறிப்பிட்டுள்ளன. அதனால் ஹெலிகாப்டர் தலைகீழாகக் கவிழ்ந்து தீப்பிடித்துக்கொண்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

பெந்தோங் நகருக்கான தலைமை அதிகாரி ஸாய்ஹம் முகம்மது கஹார் சம்பவம் நேர்ந்ததை உறுதிப்படுத்தினார். வியாழக்கிழமை (பிப்ரவரி 6) காலை 10.39 மணியளவில் உதவிக்கு அழைப்பு வந்ததாக தீயணைப்பு, மீட்புப் பிரிவுப் பேச்சாளர் ஒருவர் கூறினார்.

ஹெலிகாப்டர் முழுமையாக அழிந்துபோனதென அவர் தெரிவித்தார். ஹெலிகாப்டரின் ரேடார் சுழல் கருவியால் தாக்கப்பட்ட இந்தோனீசியப் பொறியாளர் ஒருவர் கொல்லப்பட்டதாகவும் அவர் சொன்னார்.

காலை 11.06 மணிக்குள் தீ அணைக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்
உலகம்மலேசியாவிபத்துஹெலிகாப்டர்தீஉயிரிழப்பு