‘ஹலோ கிட்டியை’ வடிவமைத்தவர் வேலையிலிருந்து ஓய்வு

‘ஹலோ கிட்டியை’ வடிவமைத்தவர் வேலையிலிருந்து ஓய்வு

1 mins read
a893883d-2efe-49fd-b851-8ea3d0aeef14
‘ஹலோ கிட்டி’ பொம்மை. - படம்: ராய்ட்டர்ஸ்

தோக்கியோ: உலகப் புகழ்பெற்ற ‘ஹலோ கிட்டி’ பொம்மையை வடிவமைத்தவர் வேலையிலிருந்து ஓய்வு பெறுகிறார்.

திருவாட்டி யூகோ யமகுச்சி, 40 ஆண்டுகளுக்கும் மேலாக ‘ஹலோ கிட்டி’யை வடிவமைக்கும் பொறுப்பில் இருந்துவந்தார்.

பொது இடங்களில் திருவாட்டி யமகுச்சி, ‘ஹலோ கிட்டி’ பாணியிலான உடைகளை அணிந்து காட்சியளிப்பது வழக்கம்.

அவர் தமது பொறுப்பை அடுத்த தலைமுறையிடம் ஒப்படைத்துள்ளார் என்று பிப்ரவரி 10ஆம் தேதி அந்தக் கதாபாத்திரத்தின் பின்னணியில் செயல்பட்ட சான்ரியோ தனது இணையப்பக்கத்தில் குறிப்பிட்டு இருந்தது.

புதிய வடிவமைப்பாளரின் பெயர் அயா என்று அந்நிறுவனம் கூறியது. 2026ஆம் ஆண்டில் அவர் பொறுப்பை ஏற்றுக் கொள்ளவிருக்கிறார்.

“திருவாட்டி யமகுச்சி ரசிகர்களின் கருத்துகளுக்கு செவிமடுத்தார். ஜப்பானிய, வெளிநாட்டுக் கலைஞர்கள், வடிவமைப்பாளர்களுடன் இணைந்து செயல்பட்டார். ஹலோ கிட்டியை அனைவரும் விரும்பும் கதாபாத்திரமாக மாற்றினார்,” என்று சான்ரியோ குறிப்பிட்டது. அவரது அரும்பணிக்கும் அது நன்றி தெரிவித்துக்கொண்டது.

முதன்முதலில் ஹலோ கிட்டி நாணயப் பைகளில் விளக்கப்படமாக இடம்பெற்றது.

பின்னர், கைப்பை முதல் சமையல் குக்கர் வரை ஏறக்குறைய அனைத்துப் பொருள்களிலும் அது இடம்பிடித்தது.

குறிப்புச் சொற்கள்