லெபனான்: இஸ்ரேலுக்கும் லெபனானில் செயல்படும் ஈரான் ஆதரவுப் போராளிக் குழுவான ஹிஸ்புல்லாவுக்கும் இடையில் ஏப்ரல் 16ஆம் தேதி எட்டப்பட்ட 10 நாள் சண்டை நிறுத்தம் நடப்பில் உள்ளது.
அதனைத் தற்போது தொடர லெபானானிய அரசாங்கத்துடன் ஒத்துழைக்கத் தயாராக இருப்பதாக ஹிஸ்புல்லா அமைப்பு சனிக்கிழமை (ஏப்ரல் 18) தெரிவித்துள்ளது. ஆனால் ஏற்றுக்கொள்ள முடியாத கடினமான பல நிபந்தனைகளை அது முன்வைத்துள்ளது.
லெபானான் அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் ஹிஸ்புல்லா எப்போதும் இருந்ததில்லை. இந்நிலையில் அந்தப் போராளிக் குழுவின் தலைவர் நயிம் காசிம் சண்டை நிறுத்தத்தை வரவேற்றுக் கொண்டாடியபோதும் அதன் போராளிகள் எப்போதும் தயார்நிலையில் இருப்பர் என்று குறிப்பிட்டார். ஏனெனில் இஸ்ரேல் ஹிஸ்புல்லாமீது எந்நேரமும் தாக்குதலை நடத்தலாம் என்பதே காரணம் என்று அவர் விளக்கினார்.
எட்டமுடியா நிபந்தனைகள்
சண்டை நிறுத்தத்தைத் தொடர்வதற்கான ஐந்து நிபந்தனைகளை அவர் வெளியிட்டார். அவற்றில் நிரந்தரமாக இஸ்ரேல் அதன் தாக்குதலை நிறுத்துவதோடு, லெபனானில் ஆக்கிரமித்துள்ள பகுதிகளை விட்டு வெளியேறவேண்டும் என்பதும் அடங்கும்.
ஈரானை இஸ்ரேல் தாக்கியதாக்கியதை எதிர்த்து எதிராக ஹிஸ்புல்லா இஸ்ரேல்மீது பதில் தாக்குதல் நடத்தியது. அதனால் இஸ்ரேல் அதன் தரைப்படைகளைத் தென்லெபனானுக்குள் அனுப்பியதோடு போர் முடிந்தாலும் அவ்வட்டாரத்தை விட்டுப்போவதில்லை என்று அறிவித்தது.
அதே நேரம், அமெரிக்காவின் தலைமையில் இஸ்ரேலும் லெபனானும் ஏற்றுக்கொண்ட சண்டை நிறுத்த உடன்பாட்டில், அரசியல் கட்சியுமான ஹிஸ்புல்லா அதன் ஆயுதங்களைக் கைவிட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.
ஹிஸ்புல்லா அதன் ஆயுதங்களைக் கைவிட எப்போதுமே ஒப்புக்கொண்டதில்லை. லெபானின் ராணுவத்தைவிட ஹிஸ்புல்லா சக்தி வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. கடந்த 2024ஆம் ஆண்டில் ஏற்பட்ட சண்டைநிறுத்த உடன்பாட்டின்படி, லெபனானைவிட்டு இஸ்ரேல் வெளியேறுவதோடு ஹிஸ்புல்லா ஆயுதங்களைக் களைய வேண்டியது தொடர்பான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படவே இல்லை.
தொடர்புடைய செய்திகள்
இஸ்ரேல், ஹிஸ்புல்லா சண்டையில் மாண்டோர் எண்ணிக்கை
தற்போது நடந்த சண்டையில் லெபனானிய மக்கள் ஏறத்தாழ 2,300 பேர் கொல்லப்பட்டனர். மேலும் இஸ்ரேலிய ராணுவத்தினர் 13 பேரும் பொதுமக்களில் இருவரும் கொல்லப்பட்டதாக இஸ்ரேலிய அதிகாரிகள் கூறினர்.

