இந்துச் சங்கம், மஹிமா சுயநலத்தால் கோயில்களைப் பாதுகாக்கவில்லை: சையது இம்ரான்

இந்துச் சங்கம், மஹிமா சுயநலத்தால் கோயில்களைப் பாதுகாக்கவில்லை: சையது இம்ரான்

1 mins read
3acd5805-6e0d-446e-9f5e-0bb3c2200068
மலேசிய ஒற்றுமை இயக்கத்தின் தலைவர் சையது இம்ரான். - படம்: வணக்கம்மலேசியா

கோலாலம்பூர்: இப்போது பரவலாகியிருக்கும் கோயில் விவகாரத்திற்கு முக்கிய காரணமாக இந்துச் சங்கமும், கோயில்களின் கூட்டமைப்பு எனும் மஹிமாவும்தான் காரணம் என மலேசிய ஒற்றுமை இயக்கத்தின் தலைவர் சையது இம்ரான் தெரிவித்துள்ளார்.

“உண்மையில் முறையான தலைமைத்துவம் இல்லை. முக்கிய விவகாரங்களை அடையாளம் கண்டு அதனைத் தீர்க்கும் வலிமை இந்துச் சங்கத்திற்கும் மஹிமாவுக்கும் இருந்தும் அவர்கள் இதைச் செய்யவில்லை,” என சையது இம்ரான் தனியார் ஊடகத்திற்கு வழங்கிய நேர்காணலில் தெரிவித்துள்ளார்.

பொறுப்பில் இருக்கும் நீங்கள் சரியாக இருந்திருந்தால் கோயில்களுக்கு இந்தப் பிரச்சினை இப்போது இருந்திருக்காது என சையது இம்ரான் தெரிவித்தார். இந்துச் சங்கத்தில் இருப்பவர்களும் மஹிமாவில் இருப்பவர்களும் ம.இ.கா.விற்கு ஆதரவாகவும் இருக்கிறார்கள். ம.இ.கா.வின் பொறுப்புகளில் இருந்தவர்கள், 60 ஆண்டுகள் ம.இ.கா.வின் பாரிசான் ஆட்சியில் கோயில்களை முறையாகப் பதிவு செய்திருந்தால் இப்போது கோயில் நிலப் பிரச்சினைகள் எழுந்திருக்காது என அவர் தெரிவித்தார்.

“இந்துச் சங்கத்தின் தலைவருக்கும் மஹிமாவின் தலைவருக்கும் என்னுடைய இந்தக் கருத்து வேதனை அளித்திருக்கலாம். ஆனால் இந்தப் பிரச்சினைக்கு அவர்களுடைய பொறுப்பற்ற செயலே காரணம். அவர்களுக்குத் தங்களைப் பாதுகாத்தால் மட்டும் போதும் என்கிற சுயநலம்தான் இப்போது கோயில் பிரச்சினைகளுக்கு அடித்தளமாக அமைந்திருக்கிறது,” என திரு சையது இம்ரான் தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்