ரமலான் நோன்பிருக்கும் இந்துப் பெண்!

துபாய்: மொரிஷியசில் ஓர் இந்துப் பெண்ணான 26 வயது நீலம் கோகுல்சிங், முஸ்லிம் நண்பர்களுடன் ஒற்றுமையை வெளிப்படுத்தும் வகையில் ரமலான் மாதத்தில் நோன்பிருக்கத் தொடங்கினார்.

ஆனால், அதுவே இப்போது அவருக்கு தன்னைத்தானே அறிந்துகொள்ளும் ஒரு வழிமுறையாகிவிட்டது.

மலேசியாவில் மாணவியாக இருந்து, பின்னர் அங்கேயே வேலை செய்தபோது நீலத்தின் நோன்புப் பயணம் தொடங்கியது.

“மலேசியாவில் பெரும்பாலோர் முஸ்லிம்கள். கடந்த 2021ஆம் ஆண்டு முதன்முறையாக ரமலான் நோன்பிருந்தேன். மலேசியாவில் எனக்கு நிறைய முஸ்லிம் நண்பர்கள் உள்ளனர். அவர்களுடன் சேர்ந்து சுகூர், இஃப்தார் உணவருந்துவது எனது வழக்கம். என்னைப் பொறுத்தவரை, நான் இந்துவாக இருந்தாலும் ரமலான் நோன்பிருப்பது ஒற்றுமையை வெளிப்படுத்துவதும் அவர்களது பண்பாட்டை அறிந்துகொள்வதும் ஆகும்,” என்று கலீஜ் டைம்ஸ் ஊடகத்திடம் சொன்னார் நீலம்.

ஈராண்டுகளுக்குமுன் துபாய் சென்ற நீலம், அங்கு இப்போது ஒரு நிதித் தொழில்நுட்ப நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.

“இங்கும் என்னைச் சுற்றியுள்ள பலரும் முஸ்லிம் என்பதால் இங்கேயும் ரமலான் நோன்பிருப்பதைத் தொடர்கிறேன்,” என்கிறார் இந்த இளம்பெண்.

“உணவு, நீரின்றி வேலைசெய்வது எவ்வளவு கடினம் என்பதைப் புரிந்துகொள்ள எனக்கு இது உதவியது,” என்றும் இவர் சொன்னார்.

ரமலான் உணர்வைத் தழுவியுள்ள நீலத்தின் அடுத்த இலக்கு அரபு மொழியைக் கற்றுக்கொள்வதுதான்.

“நீண்டகாலத்திற்கு நான் ஐக்கிய அரபுச் சிற்றரசுகளில் (யுஏஇ) வசிப்பேன் என நினைக்கிறேன். அதனால், அரபு மொழியைக் கற்றுக்கொள்ள விரும்புகிறேன். பெரும்பாலும் இவ்வாண்டின் பிற்பகுதியில் அதனைத் தொடங்கலாம். சமூகத்தில் மற்றவர்களுடன் கலந்துறவாட அது உதவும் என்பதுடன், வேலை சார்ந்தும் அது எனக்குப் பயன் தரும்,” என்கிறார் நீலம்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!