ஹாரிஸ் வெற்றிபெறுவார்: வரலாற்று அறிஞரின் கணிப்பு

1 mins read
0f450490-b7c1-438f-b738-86054f9252ba
பேராசிரியர் லிட்மன். - படம்: ஏஎஃப்பி

பெதெஸ்டா, அமெரிக்கா: “அமெரிக்க அதிபர் தேர்தலில் ஹாரிஸ் வெற்றி பெறுவார்,” என்று பேராசிரியர் லிட்மன் நம்பிக்கையுடன் ‘ஏஎஃப்பி’ செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார்.

பெதெஸ்டா நகரில் உள்ள தமது இல்லத்திலிருந்து அவர் பேசினார். ஒவ்வொரு நான்கு ஆண்டுகளுக்கும் அவர் அதிபர் தேர்தலுக்கான முடிவுகளைக் கணிப்பார்.

1984ஆம் ஆண்டிலிருந்து, ஒரே ஒரு தேர்தலைத் தவிர மற்ற அனைத்துத் தேர்தல்களிலும் அவரது கணிப்பு தவறியதில்லை.

பேராசிரியர் லிட்மன் கருத்துக்கணிப்புகளில் கவனம் செலுத்துவதில்லை. தற்போதைய அதிபர் தேர்தல் நிர்வாகத்திற்குப் பொருந்தும் உண்மை, பொய்க் கோட்பாடுகளின் அடிப்படையில் அவரின் கணிப்புகள் இடம்பெறுகின்றன.

குறிப்புச் சொற்கள்