மாண்ட இரண்டு கைக்குழந்தைகள் கண்ணாடிப் புட்டிகளில் கண்டுபிடிப்பு

மாண்ட இரண்டு கைக்குழந்தைகள் கண்ணாடிப் புட்டிகளில் கண்டுபிடிப்பு

1 mins read
364c223a-7f8a-433e-b38c-a75f4bad110d
ஹாங்காங்கின் துவென் மன் மாவட்டத்தில் உள்ள ‘மெய் ஹாங்’ கட்டடத்தில் இரண்டு கைக்குழந்தைகளின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டன. - பட்: கூகல்

ஹாங்காங்: ஹாங்காங்கில் காலியான வீடு ஒன்றின் வசிப்பறையில் துப்புரவாளர் ஒருவர் இரண்டு கைக்குழந்தைகளின் சடலங்களைக் கண்ணாடிப் புட்டிகளில் கண்டெடுத்ததைத் தொடர்ந்து, இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

அந்தச் சந்தேக நபர்களான 24 வயது ஆடவர் ஒருவரும், 22 வயது மாது ஒருவரும் கைக்குழந்தைகளின் பெற்றோர் என நம்பப்படுகிறது.

கண்ணாடிப் புட்டிகள் முப்பது சென்டிமீட்டர் உயரத்தில் இருந்தன என்றும், சடலங்களில் காயங்கள் இருந்ததற்கு எந்தவொரு வெளிப்படையான அறிகுறியும் இல்லை என்றும் தலைமை இன்ஸ்பெக்டர் அவ் யுங் டக் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

கைக்குழந்தைகளின் வயதையும், அவர்கள் பிறப்பிலேயே இறந்தார்களா என்பதையும் உறுதிசெய்ய, உடற்கூறாய்வுச் சோதனை மேற்கொள்ளப்படும் என்றும் அவர் கூறினார்.

இரண்டு கைக்குழந்தைகளும் வெள்ளிக்கிழமை காலை துவென் மன் மாவட்டத்தில், ‘மெய் ஹாங்’ கட்டடத்தில் உள்ள வீடு ஒன்றில் கண்டெடுக்கப்பட்டன.

சடலங்கள் திரவத்தில் நனைக்கப்பட்டு புட்டிகளில் வைக்கப்பட்டிருந்ததாக ஹாங்காங் செய்தி நிறுவனமான ‘ஆர்டிஎச்கே’ கூறியது.

இரண்டு நபர்களும் சட்டவிரோதமாக சடலங்களை அகற்றிய சந்தேகத்தின்பேரில் தடுத்து வைக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

குறிப்புச் சொற்கள்