ஹாங்காங்: அண்மையில் ஹாங்காங்கில் உள்ள குடியிருப்புப் பகுதி ஒன்றில் தீ மூண்டதில் பல கட்டடங்கள் தீப்பற்றி எரிந்தன. இதில் குறைந்தது 159 பேர் மாண்டனர்.
இதுவே கடந்த 80 ஆண்டுகளில் ஹாங்காங்கில் நிகழ்ந்துள்ள ஆக மோசமான தீச்சம்பவம்.
போலி பாதுகாப்புச் சான்றிதழ்கள் தயாரிக்கப்பட்டதே இதற்குக் காரணம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
இதுதொடர்பாக ஹாங்காங் அதிகாரிகள் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையே, நகரெங்கும் கட்டுமானத் தளங்களிலும் கட்டடங்களிலும் பொருத்தப்பட்டுள்ள சாரக்கட்டுகளை அகற்ற ஹாங்காங் அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது.
இதன்படி 200 தனியார் திட்டங்கள், ஏறத்தாழ பத்து பொதுத் திட்டங்கள் அடங்கிய பேரளவிலான பழுதுபார்ப்புப் பணிகளை நடத்தும் அனைத்துக் கட்டடங்களும் அவற்றில் பொருத்தப்பட்டுள்ள சாரக்கட்டுகளை டிசம்பர் 6ஆம் தேதிக்குள் அகற்றிவிட வேண்டும் என்று ஹாங்காங்கின் மேம்பாட்டு அமைச்சர் பெர்னடிட் லின் செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 3) நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.

