ஹாங்காங்கில் அடைமழை;பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு

ஹாங்காங்கில் அடைமழை;பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு

1 mins read
3d40963b-063b-40c0-8d70-5799261664ac
கனமழைக்கான சிவப்பு நிற எச்சரிக்கை சமிக்ஞையை ஹாங்காங் வானிலை ஆய்வு நிலையம் விடுத்தது. - கோப்பு படம்: ராய்ட்டர்ஸ்

ஹாங்காங்: ஹாங்காங், கனமழை காரணமாகப் பள்ளிகளுக்கு வியாழக்கிழமை விடுமுறை அறிவித்துள்ளது.

கனமழைப் பொழிவுக்கான இரண்டாவது உச்சநிலை எச்சரிக்கை சமிக்ஞையை உள்ளூர் வானிலை ஆய்வு நிலையம் விடுத்ததையடுத்து வெள்ளம் ஏற்படும் அபாயமுள்ளதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

உள்ளூர் நேரப்படி அதிகாலை 5.55 மணிக்கு கனமழைக்கான சிவப்பு நிலை எச்சரிக்கை சமிக்ஞையை அந்நகரின் வானிலை ஆய்வு நிலையம் அறிவித்தது.

அங்கு ஒரு மணி நேரத்தில் 50 மில்லிமீட்டருக்கும் அதிகமான மழை பெய்ததாகவும் இது மேலும் தொடர வாய்ப்புள்ளதாகவும் அந்நிலையம் கூறியது.

மேலும், கனமழையால் நீர்நிலைகள் நிரம்பி, திடீர் வெள்ளப்பெருக்கும் ஏற்பட வாய்ப்பிருப்பதாகவும் அது சொன்னது.

மிகவும் மோசமான வானிலைக்கான “கறுப்பு” நிலை எச்சரிக்கை சமிக்ஞை விடுக்கப்படும் வரை ஹாங்காங்கின் பங்குச் சந்தை செயல்பாட்டில் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டது.

அண்மையில் வீசிய ஹைகுய் சூறாவளிக்குப் பின்பு பெய்த கனமழை ஏற்படுத்திய சேதங்களில் இருந்து ஹாங்காங் நகரம் மீண்டுவரும் சூழலில் இப்பொழுது மீண்டும் கனமழை பெய்யத் தொடங்கியுள்ளது.

ஹாங்காங்கின் சில பகுதிகளில் நிலச்சரிவு ஏற்படும் அபாயம் உள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

ஹாங்காங் அருகே உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலத்தால் வெள்ளிக்கிழமையும் சனிக்கிழமையும் கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக அந்நகரின் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

குறிப்புச் சொற்கள்