மலேசியாவைப் பாதிக்கவுள்ள அதிக வெப்பநிலை, புகைமூட்டம்

மலேசியாவைப் பாதிக்கவுள்ள அதிக வெப்பநிலை, புகைமூட்டம்

1 mins read
0b1cf5b1-99d8-40a6-8891-65621512fb06
படம்: THE STAR/ASIA NEWS NETWORK -

வரும் மாதங்களில் மலேசியாவில் வெப்பநிலை கூடும், புகைமூட்டம் அதிகரிக்கும் என்று முன்னுரைக்கப்பட்டுள்ளது.

அப்படிப்பட்ட பருவநிலையை எதிர்கொள்ளத் தயாராய் இருக்கவேண்டும் என்று அந்நாட்டின் சுற்றுப்புற, பருவநிலை மாற்ற அமைச்சர் நிக் நாஸ்மி நிக் அகமது மக்களை எச்சரித்தார்.

புகைமூட்டத்தை அதிகம் எதிர்பார்க்கலாம். குறிப்பாக வரும் ஆகஸ்ட் மாதம் வரை மழைக்காலம் மாறும் வேளையில் இந்நிலை உருவாகும்.

"இந்தக் காலகட்டத்தில் பொதுவாக வெப்பநிலை அதிகரிக்கும், அதிக வறட்சியை எதிர்கொள்ளவேண்டியிருக்கும். கூடுதலான இடங்களில் காட்டுத் தீ ஏற்படலாம்," என்று 'தி ஸ்டார்' நாளிதழிடம் அவர் கூறினார்.

குறிப்புச் சொற்கள்