நேப்பாள விமான விபத்து: மனித தவறே காரணம்

நேப்பாள விமான விபத்து: மனித தவறே காரணம்

1 mins read
6d6af637-361a-43c0-9102-50b2fb316cb7
-

நேப்பாளத்தில் வெடித்துச் சிதறிய 'யெட்டி ஏர்லைன்ஸ்' விமானம் விபத்துக்குள்ளானதற்கு மனிதக் கவனக்குறைவே காரணம் என ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இயந்திரத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக விமானத்தின் விசைகள் தவறான திசையில் திருப்பப்பட்டன. இதனால் விமானம் விழுந்து நொறுங்கியது. இந்த சம்பவத்தில் 71 பேர் மாண்டனர்.

தலை­ந­கர் காத்­மாண்­டு­வில் இருந்து புறப்­பட்­டுச் சென்­ற விமானம் பொக்­காரா விமான நிலை­யத்­தில் தரை இறங்­கு­வ­தற்கு முன்­னர் விழுந்து நொறுங்கியது. இந்தச் சம்பவம் ஜனவரி 15ஆம் தேதி நடந்தது.

விமானத்தில் மொத்தம் 72 பேர் இருந்தனர். இதுவரை 71 பேரின் சடலங்கள் மட்டுமே மீட்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், முதல்கட்ட விசாரணையில் விமானிகளின் செயல்களில் தவறு இருக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாகக் கூறப்பட்டது.