மனித உரிமை மீறல்களை வேடிக்கை பார்க்க முடியாது: போப் லியோ

2 mins read
65468ee6-1337-4ae4-aad4-dceb4ef01844
வத்திகன் நகரில் உள்ள செயின்ட் பீட்டர்ஸ் சதுக்கத்தில் சனிக்கிழமை (டிசம்பர் 6) நம்பிக்கை ஆண்டுவிழாக் கொண்டாட்டங்களை தலைமையேற்று வழிநடத்திய போப் லியோ. - படம்: இபிஏ

கத்தோலிக்க தலைநகரான வத்திகன் சிட்டியில் சனிக்கிழமை (டிசம்பர் 6) புதிய சமயத் தலைவர்களை வரவேற்ற போப் லியோ, உலகில் நடக்கும் மனித உரிமை மீறல்களை அருகில் இருந்து வேடிக்கை பார்க்கமுடியாது என்று தமது உரையில் கூறியுள்ளார்.

அதன்படி அவர் அமெரிக்க அதிபர் டிரம்ப் குடியேறிகளுக்கு எதிராக எடுத்துவரும் நடவடிக்கைகளை நேரடியாகச் சாடியுள்ளார் என்று கருதப்படுகிறது.

கத்தோலிக்க சமயத்தின் 14ஆம் தலைவராக கடந்த மே மாதம் தேர்வான போப் லியோ ஓர் அமெரிக்கர் ஆவார். அவர் போப் பிரான்ஸ்சிஸ் மறைவுக்குப் பிறகு பதவி ஏற்றார்.

”கத்தோலிக்க சமயத் தலைமைத்துவம் உலகில் நடக்கும் மனித உரிமை மீறல்களை, அநியாயங்களை, கடுமையான பாரபட்சங்களை வேடிக்கை பார்க்காது என்பதை நான் மறு உறுதிப்படுத்துகிறேன்,” என்று அங்கு வருகை தந்திருந்த 13 சமயத் தலைவர்களிடம் அவர் கூறினார்.

கத்தோலிக்க சமயத் தலைமைத்துவம், உலகில் உள்ள 1.4 பில்லியன் கத்தோலிக்கர்களின் தலைமையகமாக இயங்கும் வத்திகன் தேவாலயத்தில் செயல்படுகிறது. அதன் தலைவராக போப் லியோ விளங்குகிறார்.

அவரது நிர்வாகம், மனிதகுலத்துக்கு நன்மை பயக்க இயங்கிவருகிறது என்றார் அவர். மேலும், மனசாட்சிக்கு இடமளிப்போரிடம் உதவிக்கு அழைப்பு விடுத்து, வாழ்வின் கொடுமைகளைச் சந்தித்து சமூகத்தில் ஏழ்மையில் வாடுவோரின் குரல்களைக் கேட்டு தமது நிர்வாகம் செயல்படுகிறது என்று குறிப்பிட்டார்.

அவருக்கு முன்னதாகத் தலைமைப் பொறுப்பில் இருந்த போப் பிரான்சிஸ் விட்டுச்சென்றுள்ள சமமின்மைக்கு எதிரான முயற்சிகளையும் குடியேறிகள் போன்ற பாதிப்படைந்த சமூகங்களுக்கு உதவும் பணிகளையும் தொடரப்போவதாகவும் அவர் கூறினார்.

குடியேறிகளை அதிபர் டிரம்ப் நடத்திய விதத்தைப் பற்றி கடந்த நவம்பர் மாதம் கருத்து தெரிவித்த போப் லியோ, அதனை முற்றிலும் மரியாதைக் குறைவான செயல் என்று கூறியிருந்தார். சனிக்கிழமை முதல் சமயத் தலைவராக அங்கீகாரம் செய்துவைக்கப்பட்டோர் இலங்கை, பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்தவர்கள்.

குறிப்புச் சொற்கள்