மலேசிய விரைவுச்சாலையில் மனித உடல்

மலேசிய விரைவுச்சாலையில் மனித உடல்

1 mins read
ab82f891-2777-4c43-8fd7-dff8ff7c1a15
தலையும் கைகளும் கால்களும் இந்தப் பெட்டிக்குள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. படம்: தி ஸ்டார் -
Google News Preferred Icon

சுங்கை பூலோ: மலேசியாவின் வடக்கு-தெற்கு விரைவுச்சாலையில் ஒரு மனித உடலும் உடற்பாகங்களும் கண்டுபிடிக்கப்பட்டன.

அதுகுறித்து ஆடவர் ஒருவர் செவ்வாய்க்கிழமை (17-1-2023) காவல்துறைக்குத் தகவல் தெரிவித்தார்.

"காலை 11.45 மணியளவில் அதுபற்றித் தகவல் கிடைத்தது," என்று சுங்கை பூலோ காவல்துறை அதிகாரி ஷஃபாட்டன் அபு பக்கர் கூறினார்.

"சம்பவ இடத்தில் கழுத்து முதல் இடுப்பு வரையிலான மனித உடல் காணப்பட்டது," என்றார் அவர்.

தலை, கால்கள், கைகள் ஆகியவை ஒரு பெட்டிக்குள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

மாண்டவர் யார் என்பது இன்னும் அடையாளம் காணப்படவில்லை என்ற அவர், அவ்விடத்தில் எந்த அடையாள ஆவணங்களும் இல்லை என்றும் சொன்னார்.

இச்சம்பவத்தை மரணம் என வகைப்படுத்தி காவல்துறை விசாரித்து வருவதாக 'தி ஸ்டார்' செய்தி தெரிவித்தது.

சுங்கை பூலோ மருத்துவமனைக்கு அனுப்பப்பட்ட அந்த உடல் இன்று கூறாய்விற்கு உட்படுத்தப்படும் என்றும் திருவாட்டி ஷஃபாட்டன் கூறினார்.