சோல்: தென்கொரியாவில் பெய்துவரும் கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி ஒரு வயதுக் குழந்தை பலியானது. நூற்றுக்கணக்கானோர் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டனர்.
தென்கொரியாவின் யோங்ஜு நகரில் வியாழக்கிழமை இரவு நிலச்சரிவு ஏற்பட்டது. அதில் அந்தக் குழந்தையின் வீடு முற்றிலுமாக மண்ணில் புதைந்தது.
மீட்புப் பணியில் 40 தீயணைப்பு வாகனங்களும் தீயணைப்பு வீரர்கள் 110 பேரும் ஈடுபட்டதாகக் கூறப்பட்டது.
மீட்புப் படையினர் புதையுண்ட வீட்டிலிருந்து ஒன்பது பேரைப் பாதுகாப்பாக மீட்டனர். ஆனால் மருத்துவமனைக்குக் கொண்டுசென்ற சிறிது நேரத்தில் குழந்தை மாண்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
செவ்வாய்க்கிழமை கோடைமழை தொடங்கியதிலிருந்து இது இரண்டாவது மரணம்.
யோங்ஜு மாநிலம் பருவமழையால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. வியாழன் நள்ளிரவு முதல் அங்கு 284 மில்லிமீட்டருக்கு அதிகமான மழை பதிவாகியுள்ளது.
ஜெஜு தீவு உள்ளிட்ட நாட்டின் தென்பகுதிகளில் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகப் பேரிடர் நிர்வாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
கனமழையால் சில சாலைகளும் நெடுஞ்சாலைகளும் பாதிக்கப்பட்டுள்ளன.
தொடர்புடைய செய்திகள்
தென்மேற்கு மாநிலமான ஹம்பியோங்கில் வியாழக்கிழமை ஆற்று வெள்ளத்தில் சிக்கி அரசு ஊழியர் ஒருவர் பலியானார்.

