தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

பிரான்சின் தெற்குப் பகுதியில் கடுமையான காட்டுத் தீ

1 mins read
d396aac8-c986-47b3-8c7d-45b950bdba36
கிட்டத்தட்ட ஒரு வாரமாக எரிந்து வரும் காட்டுத் தீயால் 240 ஹெக்டர் நிலப்பரப்பு நாசமாகின. - படம்: ராய்ட்டர்ஸ்

பாரிஸ்: பிரான்சின் இரண்டாவது ஆகப் பெரிய நகரமான மார்சேயில் கடுமையான காட்டுத் தீ ஏற்பட்டுள்ளது.

அந்நகரிலிருந்து 40 கிலோ மீட்டர் தள்ளியுள்ள வடமேற்குப் பகுதியில் ஏற்பட்டுள்ள காட்டுத் தீயைக் கட்டுப்படுத்த கிட்டத்தட்ட 1,000 தீயணைப்பு வீரர்கள் களமிறங்கியுள்ளனர். அவர்களுக்குத் துணையாகச் சில ஹெலிகாப்டர்களும் உதவி வருகின்றன.

வெப்பநிலை குறைவாக இருப்பதாலும் காற்றில் ஈரப்பதம் அதிகமாக இருப்பதாலும் நிலைமை கொஞ்சம் கொஞ்சமாகக் கட்டுக்குள் வருவதாக அதிகாரிகள் கூறினர்.

கிட்டத்தட்ட ஒரு வாரமாக எரிந்து வரும் காட்டுத் தீயால் 240 ஹெக்டர் நிலப்பரப்பு நாசமாகின.

காட்டுத் தீ காரணமாக நூற்றுக் கணக்கான மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டனர். மேலும் அவ்வட்டாரத்தில் உள்ள விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டது.

தீயணைப்பு வீரர்களின் துரிதமான நடவடிக்கையால் 150 பேர் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். மேலும் 150 வீடுகள் காட்டுத் தீயிலிருந்து தப்பிக்க உதவியதாக மீட்புப் பணிகளுக்கான அமைப்பு தெரிவித்தது.

தீயால் 120 வீடுகள் சேதமடைந்ததாகத் தெரிவிக்கப்பட்டது. இரண்டு தீயணைப்பு வீரர்கள் காயமடைந்தனர். தீயணைப்பு நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

குறிப்புச் சொற்கள்