பிறந்த நாள் கொண்டாட்டத்தில் அழைப்பில்லாமல் வந்த கரடி

பிறந்த நாள் கொண்டாட்டத்தில் அழைப்பில்லாமல் வந்த கரடி

படம்: ஏஞ்சலா சாப்பா/டிக்டாக்

27 Sep 2023 - 6:28 pm

1 mins read

மெக்சிகோ சிட்டி: மெக்சிகோவின் நியூவோ லியோனில் உள்ள சிபின்க்யூ பூங்காவில் நடந்த பிறந்த நாள் கொண்டாட்டத்தில் அழையா விருந்தாளியாகக் கரடி ஓன்று கலந்துகொண்டது.

கரடியின் வருகை, அங்கு பிறந்தநாள் கொண்டாடிய குடும்பத்திற்கு ரத்தத்தை உறைய வைப்பதாக இருந்தது.

இச்சம்பவம் குறித்துக் காணொளி ஒன்று சமூக ஊடகத்தில் பகிரப்பட்டது.

பூங்காவில் இருந்த மேசை மீதேறி, அதில் வைக்கப்பட்டிருந்த பல உணவு வகைகளையும் கரடி சுவைத்ததை டிக்டாக் பயனாளரான ஏஞ்சலா சாப்பா செவ்வாய்க்கிழமை பதிவிட்ட காணொளியில் காண முடிந்தது.

மேலும், பிறந்தநாள் கொண்டாடிய குடும்பம், கரடியைக் கண்ட அதிர்ச்சியில் அச்சத்தில் உறைந்துபோயிருந்ததையும் காணொளி காட்டியது.

View post on TikTok

இக்காணொளியை இதுவரை 13 மில்லியனுக்கும் அதிகமான பார்வையாளர்கள் கண்டுள்ளனர்.

காணொளியைப் பார்த்து முடிக்கும்வரை உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு இருந்ததாகப் பல இணையவாசிகள் கருத்து பதிவிட்டிருந்தனர்.

குறிப்புச் சொற்கள்