பசித்ததால் கலைப்படைப்பில் இருந்த வாழைப்பழத்தை ருசித்த மாணவர்

பசித்ததால் கலைப்படைப்பில் இருந்த வாழைப்பழத்தை ருசித்த மாணவர்

1 mins read
890b96ef-eaee-4479-9564-e0913f860e22
படம்: LEEUM MUSEUM OF ART -

இத்தாலியக் கலைஞர் மவ்ரிசியோ கேட்டலனின் புகழ்பெற்ற நகைச்சுவை கலையாகக் கருதப்படும் படைப்பில் இருந்த வாழைப்பழத்தை எடுத்து மாணவர் ஒருவர் தின்றுவிட்டார்.

தமக்குப் பசித்ததால் அப்பழத்தை உண்டதாக அவர் கூறினார்.

அந்தப் படைப்பின் மதிப்பு கிட்டத்தட்ட 160,000 வெள்ளி.

இச்சம்பவம் தென்கொரியாவில் உள்ள அருங்காட்சியகத்தில் ஏப்ரல் 27ஆம் தேதி நடந்தது.

மவ்ரிசியோவின் 38 படைப்புகள் அந்த அருங்காட்சியகத்தில் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன.

படைப்புகளைக் காண சோல் தேசிய பல்கலைக்கழக மாணவர்கள் அருங்காட்சியகத்திற்குச் சென்றனர். அப்போது அம்மாணவர் பழத்தை உண்டதாக அதிகாரிகள் கூறினர்.

மாணவர் பழத்தை உண்டபிறகு அதன் தோலை மீண்டும் படைப்பில் ஒட்டுவில்லையைக்கொண்டு ஒட்டிவிட்டார்.

படைப்புகளுக்குச் சேதம் விளைந்தால் அது மீண்டும் ஒரு படைப்பாக மாறும் என்றும் அந்த மாணவர் கூறினார்.

மவ்ரிசியோவின் படைப்பில் உள்ள வாழைப்பழம் மூன்று அல்லது இரண்டு நாள்களுக்கு ஒருமுறை மாற்றப்படுவது வழக்கம்.

குறிப்புச் சொற்கள்