புளோரிடா: அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில் கடும் மழைப் பொழிவைக் கொண்டுவந்த ஐசாயஸ் சூறாவளி, வெப்பமண்டலத்துக்குப் பிந்திய புயலாக வகைப்படுத்தப்பட்டுள்ளது.
இவ்வாண்டின் முதல் அல்டாண்டிக் பருவநிலையான அந்தப் புயல் புளோரிடாவில் திடீர் வெள்ளத்தையும் புயலையும் ஏற்படுத்தியது.
அது, அமெரிக்காவின் தென்கிழக்குப் பகுதிகளில் வீசுவதாக சிபிஎஸ் நியூஸ் நிறுவனம் தெரிவித்தது.
அபாயமான புயலால் ஒருசில இடங்களில் 9 அடி வரை வெள்ளம் பெருகக்கூடும் என்பதால் புளோரிடா, அலபாமா, ஜார்ஜியா ஆகியவற்றில் அவசரநிலை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வடக்கு அமெரிக்காவை வார இறுதி நாள்களில் பதம் பார்க்கும் முன்று சூறாவளிகளில் ஐசாயஸ் புயலும் ஒன்று.
புயல் காரணமாக புளோரிடா, அலபாமா ஆகியவற்றில் ஆயிரக்கணக்கானோர் வீடுகளைவிட்டு வெளியேறும்படி உத்தரவிடப்பட்டனர்.
புளோரிடா செனட்டர் ரிக் ஸ்காட், ‘காத்திருக்கவேண்டாம்! இப்போதே வெளியேறுங்கள்!’ என்று குடியிருப்பாளர்களிடம் அறிவுறுத்தும் பதிவைச் சமூக ஊடகத்தில் பதிவிட்டார்.
புளோரிடாவை அடுத்து அலபாமா, பின் டென்னஸ்ஸி வேலி ஆகியவற்றை நோக்கி ஐசாயஸ் புயல் நகரும் என்று தேசிய வானிலைச் சேவை தெரிவித்தது.
புளோரிடாவில் ஏறக்குறைய 430,000 பேரும் அலபாமாவில் கிட்டத்தட்ட 300,000 பேரும் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் கடுமையாக அவதியுற்றதாக பவர்அவுட்டேஜ் தளம் தெரிவித்தது.
