பொந்தியான்: மலேசியா தொடர்ந்து நல்ல முறையில், ஊழல் இன்றி நிர்வகிக்கப்பட்டால், விரைவான முன்னேற்றத்தை அடைய அசாதாரண ஆற்றலைக் கொண்டுள்ளது என்று பிரதமர் அன்வார் இப்ராகிம் தெரிவித்துள்ளார். நாட்டின் தற்போதைய பொருளியல் செயல்திறன், நிர்வாக நிலைத்தன்மை, அரசாங்கக் கொள்கைகளில் முதலீட்டாளர்களின் நம்பிக்கையால் உந்தப்பட்டு வலுவான நிலையில் இருப்பதைக் காட்டுகிறது என்று அவர் கூறினார். நிதியமைச்சராகவும் இருக்கும் அன்வார், நாட்டின் பொருளியல் வளர்ச்சி செயல்திறன், குறிப்பாக, கடந்த ஆண்டின் நான்காம் காலாண்டில், அரசாங்கத்தின் எதிர்பார்ப்புகளைவிட அதிகமாக இருந்தது என்று கூறினார். கடந்த ஆண்டின் இறுதிக் காலாண்டில் பெற்ற புள்ளிவிவரங்களால் நிதியமைச்சராக நானே ஆச்சரியப்பட்டேன் என்று பொந்தியான் மருத்துவமனை மற்றும் ரக்யாட் மடானி விழாவில் கூடுதல் கட்டடத்திற்கான அடிக்கல் நாட்டு விழாவில் அவர் பேசினார். அரசாங்கம் சுமார் 5.4 விழுக்காடு முதல் 5.5 விழுக்காடு வரை பொருளியல் வளர்ச்சியை எதிர்பார்த்திருந்ததாகவும், ஆனால் மலேசியா நான்காவது காலாண்டில் 6.4 விழுக்காடு வளர்ச்சியைப் பதிவு செய்ததாகவும் அவர் குறிப்பிட்டார் என்று தமிழ் மலர் செய்தி தெரிவித்தது.
நிதி அமைச்சராக நானே ஆச்சரியப்பட்டேன்: அன்வார்
1 mins read
பொந்தியான் மருத்துவமனை மற்றும் ரக்யாட் மடானி விழாவில் கூடுதல் கட்டடத்திற்கான அடிக்கல் நாட்டு விழாவில் பிரதமர் அன்வார் இப்ராகிம் பேசினார். - படம்: தமிழ் மலர்
I myself was surprised as Finance Minister: Anwar
Prime Minister Anwar Ibrahim stated Malaysia has extraordinary potential for rapid progress if well-managed and free from corruption. He noted the country's strong economic performance, driven by administrative stability and investor confidence. As Finance Minister, Anwar was surprised by Malaysia's fourth-quarter economic growth last year, which reached 6.4%, exceeding the government's expectation of 5.4-5.5%. He delivered these remarks at an event in Pontian.
Generated by AIகுறிப்புச் சொற்கள்

