டிரம்ப் வரிவிதிப்புக்கு எளிதில் இணங்கமாட்டேன்: ஜப்பானியப் பிரதமர்

டிரம்ப் வரிவிதிப்புக்கு எளிதில் இணங்கமாட்டேன்: ஜப்பானியப் பிரதமர்

1 mins read
8ddeb67c-cedb-4d17-b645-6efcbda476df
ஜப்பானியப் பிரதமர் ‌ஷிகெரு இ‌ஷிபா. - கோப்புப்படம்: ராய்ட்டர்ஸ்
Google News Preferred Icon

தோக்கியோ: அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தையில் தாம் எளிதில் விட்டுக்கொடுக்கப் போவதில்லை என்று ஜப்பானியப் பிரதமர் ‌ஷிகெரு இ‌ஷிபா கூறியுள்ளார்.

அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப், ஜப்பானிலிருந்து இறக்குமதியாகும் பொருள்களுக்கு 35 விழுக்காடு வரையில் வரிவிதிக்கப்போவதாக எச்சரித்துள்ளார்; அதைத் தவிர்க்கும் முயற்சியில் தோக்கியோ ஈடுபட்டுள்ளது.

“நாங்கள் எளிதில் விட்டுக்கொடுக்கமாட்டோம். அதனால்தான் இந்நடவடிக்கை சவாலாக இருக்கிறது, அதிக நேரம் ஆகிறது,” என்று திரு இ‌ஷிபா தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் சொன்னார்.

வரிவிதிப்பை திரு டிரம்ப் இம்மாதம் ஒன்பதாம் தேதி வரை ஒத்திவைத்துள்ளார். அதற்கு முன்பு அவரின் அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வுகாணும் முயற்சியில் ஜப்பான் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.

திரு டிரம்ப், கடந்த ஏப்ரல் மாதம் அமெரிக்காவின் வர்த்தகப் பங்காளி நாடுகள் மீது அடிப்படையாக 10 விழுக்காடு வரிவிதித்தார். கூடுதல் வரிவிதிப்பதை ஜூலை ஒன்பதாம் தேதி வரை ஒத்திவைத்தார்.

பேச்சுவார்த்தை நடத்த ஜப்பான் உள்ளிட்ட நாடுகளுக்கு வாய்ப்பளிக்க அவர் அவ்வாறு செய்தார். அமெரிக்காவிலிருந்து வரும் வாகனங்கள், அரிசி ஆகியவற்றைக் கூடுதலான அளவில் ஏற்றுக்கொள்ளுமாறு திரு டிரம்ப், குறிப்பாக ஜப்பானுக்கு நெருக்குதல் அளித்துவருகிறார்.

குறிப்புச் சொற்கள்
உலகம்ஜப்பான்அமெரிக்காடோனல்ட் டிரம்ப்வர்த்தகம்