வாஷிங்டன்: அதிபர் டோனல்ட் டிரம்ப் வரி விதிப்பின் காரணமாக அலுமினிய கேன்களின் விலை அதிகரித்தால் அதிக பிளாஸ்டிக் போத்தல்களில் பானங்கள் விற்க வேண்டியிருக்கும் என்று கொக்கோ கோலா அறிவித்துள்ளது.
அமெரிக்காவுக்குள் இறக்குமதி செய்யப்படும் எஃகு மற்றும் அலுமினியத்துக்கு அதிக வரி விதிக்கப்படும் என்று டோனல்ட் டிரம்ப் அறிவித்ததைத் தொடர்ந்து, அலுமினிய கேன்களில் விற்கப்படும் பானங்கள், உணவின் விலை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த டிசம்பரில் கொக்கோ கோலா நிறுவனம், 2030ஆம் ஆண்டுவாக்கில் அதன் தயாரிப்புகளில் 50 விழுக்காடு மறுசுழற்சி செய்யப்பட்ட பொருள்ககளைப் பயன்படுத்துவதற்கான அதன் இலக்கை 2035ல் 35 விழுக்காடு முதல் 40 விழுக்காட்டுக்குக் குறைப்பதாக அறிவித்தது.
சுற்றுச்சூழல் குழுக்கள், உலக அளவில் அதிக பிளாஸ்டிக்கை பயன்படுத்தி மாசுபடுத்துவதில் கொக்கோ கோலா முதலிடம் வகிப்பதாகக் கூறி வருகின்றன.
இந்நிலையில் “ஒரு பேக்கேஜில் செலவு அதிகரித்தால் கட்டுபடியாகக் கூடிய விலையில் பானங்களை விற்க மற்றொரு பேக்கேஜ் பயன்படுத்தப்படும்,” என்று கொக்கோ கோலா நிறுவனத்தின் தலைமை நிர்வாகியான ஜேம்ஸ் குயின்ஸி தெரிவித்தார்.
“உதாரணமாக, அலுமினிய கேன்களின் விலை உயர்ந்தால், பிளாஸ்டிக் பாட்டில்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கலாம்,” என்றார் அவர்.