‘சிங்கப்பூரிலிருந்து வரும் கட்டுமானக் குப்பை சட்டவிரோதமாகக் குவிப்பு’: ஜோகூரில் குமுறல்

‘சிங்கப்பூரிலிருந்து வரும் கட்டுமானக் குப்பை சட்டவிரோதமாகக் குவிப்பு’: ஜோகூரில் குமுறல்

1 mins read
800f454f-873c-4e1d-b373-5a86ce9549cd
ஜோகூரின் சுங்கை செனாய் பெலேக்கொக் கம்பத்தில் சிங்கப்பூரிலிருந்து எடுத்துவரப்படுவதாகக் கூறப்படும் கட்டுமானக் குப்பை குவிக்கப்படும் பகுதி மூடப்பட்டிருக்கிறது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
Google News Preferred Icon

பொந்தியான்: மலேசியாவின் ஜோகூர் மாநிலத்தில் உள்ள கிராமங்களில் வசிக்கும் சிலருக்கு இரவில் சரியாக உறங்க முடியவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு நாளும் இரவில் பல கனரக லாரிக்கள் அங்கு வந்து கட்டுமானக் குப்பையைக் குவிப்பதாக அவர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். அந்தக் குப்பை சிங்கப்பூரிலிருந்து கொண்டுவரப்படுவதாக ஜோகூர் அதிகாரிகள் நம்புகின்றனர்.

சென்ற ஆண்டு தொடக்கத்திலிருந்து இந்நிலை தொடர்வதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. லாரிக்கள் உள்ளிட்ட வாகனங்கள் பின்னிரவில் இந்நடவடிக்கைகளில் ஈடுபடுவதால் தங்களால் உறங்க முடியவில்லை என்று பாதிக்கப்பட்ட பகுதிகளில் குடியிருப்பாளர்கள் கூறுகின்றனர்.

குறிப்புச் சொற்கள்
சிங்கப்பூர்உலகம்மலேசியாகுப்பைகட்டுமானம்