அமெரிக்காவின் இலனோய் மாநிலத்தில் ஸ்பிரிங்பீல்ட் அருகேவுள்ள இன்டர்ஸ்டேட் விரைவுச்சாலை 55இல் கடுமையான விபத்து ஒன்று ஏற்பட்டுள்ளது.
புழுதிப்புயல் காரணமாக கிட்டத்தட்ட 60 கார்கள் ஒன்றன் மீது ஒன்று மோதிக்கொண்டன. விபத்தில் இரண்டு கனரக வாகனங்களும் சிக்கின.
விபத்தில் குறைந்தது 6 பேர் மாண்டதாகவும் காயம் காரணமாக 30க்கும் மேற்பட்டவர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
விபத்து சாலையின் இரண்டு பக்கங்களிலும் நடந்ததாகவும், இரண்டு கனரக வாகனம் தீப்பிடித்ததாகவும் தெரிவிக்கப்பட்டது. ஒரு கனரக வாகனம் வெடித்தது.
விபத்து நடந்த விரைவுச்சாலை மிக முக்கியமான சாலைகளில் ஒன்று. அது பல அமெரிக்க நகரங்களை இணைக்கும் விரைவுச்சாலையாக உள்ளது.