பெய்ச்சிங்: அனைத்துலகப் பண நிதியத்தின் நிர்வாக இயக்குநர் கிறிஸ்டலினா ஜியோர்ஜிவா முன்னணித் தலைவர்களைச் சந்திப்பதற்காக புதன்கிழமை சீனா செல்கிறார்.
ஆகஸ்ட் 30ஆம் தேதிக்கும் செப்டம்பர் 3ஆம் தேதிக்கும் இடைப்பட்ட காலத்தில், திருவாட்டி ஜியோர்ஜிவா சீனாவின் மூத்த தலைமைத்துவக் குழுவுடன் இருதரப்புக் கலந்துரையாடல்களில் ஈடுபடுவார் என்று தெரிவிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து அவர் ஆசியான் மாநாட்டுக்காக ஜகார்த்தாவுக்கும் ஜி20 மாநாட்டுக்காக புதுடெல்லிக்கும் பயணம் மேற்கொள்வார் என்று அனைத்துலகப் பண நிதியத்தின் பேச்சாளர் கூறினார்.
திருவாட்டி ஜியோர்ஜிவா செப்டம்பர் 4 முதல் செப்டம்பர் 7 வரை ஜகார்த்தாவில் இருப்பார் என்றும் செப்டம்பர் 8 முதல் செப்டம்பர் 10 வரை புதுடெல்லியில் இருப்பார் என்றும் பேச்சாளர் தெரிவித்தார்.
இவ்வாண்டின் முதல் காலாண்டில் மீண்டெழுந்த பொருளியல் காரணமாக, சென்ற மாதம் அனைத்துலகப் பண நிதியம் அதன் உலகளாவிய வளர்ச்சி மதிப்பீடுகளை சற்று உயர்த்தியது. இருப்பினும், சவால்கள் தொடரும் என்று அது எச்சரித்தது.

