குடிநுழைவுத் திட்டத் தோல்வி, பிரான்ஸ் போராட்டங்களின் காரணம்: ஜேடி வான்ஸ்

குடிநுழைவுத் திட்டத் தோல்வி, பிரான்ஸ் போராட்டங்களின் காரணம்: ஜேடி வான்ஸ்

படம்: இபிஏ

18 Oct 2026 - 4:32 pm

2 mins read
Watch on YouTube

வாஷிங்டன்: அமெரிக்கத் துணை அதிபர் ஜேடி வான்ஸ், சனிக்கிழமை (அக்டோபர் 17) தனது எக்ஸ் சமூக ஊடகத் தளத்தில் ஒரு பதிவைப் பகிர்ந்திருந்தார்.

பிரான்சில் நடந்துவரும் மக்கள் போராட்டத்துக்கும் வன்முறைக்கும் அந்நாட்டின் அரசாங்கம் மேற்கொண்ட குடிநுழைவுத் திட்டடக் கொள்கையே் முக்கியக் காரணம் என்று பதிவிட்டு அங்கு நடந்த வன்முறைச் சம்பவங்களின் காணொளிகளையும் பகிர்ந்தார். பிரான்சில் நடந்த வன்முறையின்போது அங்குள்ள நகர மண்டபம் தீப்பிடித்து எரிவது காணொளியில் தெரிந்தது.

“ஐரோப்பிய நாடுகளில் உள்ள சுதந்திரவாதிகள் அறிவுரையின்படி மூன்றாம் உலக மக்களை பிரான்ஸ் குடியமர்த்தியது. மனிதாபிமானம், பன்முகத்தன்மை என்று அதற்கு விளக்கம் அளிக்கப்பட்டது. சமூக ஒருங்கிணைப்பின் அடிப்படைகள், குடிமக்கள் அதனுடன் ஏற்று இணங்கி வாழும் தன்மை ஆகியவற்றைப் பிரான்ஸ் கருத்தில் கொள்ளாது மறுத்தது. இதுபோன்று நடக்கும் என்று எச்சரிக்கப்பட்டும் அதனை பிரான்ஸ் பொருட்படுத்தவில்லை,” என்று தனது பதிவில் திரு வான்ஸ் விளக்கினார்.

மேலும் பல நினைவுச் சின்னங்கள் தீக்கிரையாகாமல் வியப்பூட்டும் மக்களைக் கொண்ட அழகிய நாடான பிரான்சில் நடக்கும் இந்த வன்முறைகள் முடிவுக்கு வரவேண்டும் என பிரார்த்திப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

இதற்கிடையே அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப், பிரான்சில் நடக்கும் நாடுதழுவிய வன்முறைகள் குறித்து வேடிக்கை செய்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டார்.

“வாருங்கள் பிரான்ஸ் செல்லலாம். புரட்சிக்குப் பெயர்பெற்ற பிரான்சுக்குச் சென்று நாமும் ஆர்ப்பாட்டங்களில் கலந்துகொள்வோம்,” என்று தனது பதிவில் தெரிவித்தார்.

கட்டுக்கடங்காத பணவீக்கத்தை ஏற்றுக்கொள்ளமுடியாத பிரான்ஸ் மக்கள் பல்லாயிரக்கணக்கில் வீதிகளில் இயங்கிப் போராட்டங்களை நடத்திவருகின்றனர். காவல்துறையினருடன் வன்முறைகள் ஏற்பட்டதுடன், தீ மூட்டப்பட்ட சம்பவங்களும் நிகழ்ந்துள்ளன. பல கடைகளுக்குள் மக்கள் புகுந்து பொருள்களைத் திருடிச் சென்றனர்.

பிரான்ஸ் பிரதமர் செபஸ்டியன் லெகொர்னு, 150 காவல்துறை அதிகாரிகள் வன்முறையில் காயமடைந்துள்ளனர் என்று கூறினார். பல நகரங்களில் வன்முறை வெடித்ததோடு, கடைகளுக்குள் புகுந்து கொள்ளையடித்த குற்றங்கள் பெருமளவில் நடந்துள்ளன.

குறிப்புச் சொற்கள்
பிரான்ஸ்பணவீக்கம்போராட்டம்ஆர்ப்பாட்டம்புரட்சிமக்கள்தொகைகுடிநுழைவுதிட்டம்தோல்விஒருங்கிணைப்புசமூகம்