பினாங்கு: சுற்றுலா விசாவின் மூலம் மலேசியாவுக்குள் நுழைந்த ஆறு வெளிநாட்டவர்கள் தகுந்த அனுமதி இல்லாமல் கலை நிகழ்ச்சியில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டுள்ளனர்.
இச்சம்பவம் பினாங்கின் பட்டர்வொர்த்தில் உள்ள ஒரு சமய வழிபாட்டுத் தலத்தில் அக்டோபர் 10ஆம் தேதி நடந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
“தகுந்த அனுமதி இல்லாமல் சிலர் கலை நிகழ்ச்சியில் ஈடுபடுவதாக தங்களுக்கு தகவல் வந்தது, அதைத் தொடர்ந்து அதிகாரிகள் அங்கு சென்றனர். அப்போது அந்த 6 கலைஞர்கள் பாடல்கள் பாடிக்கொண்டிருந்தனர். அதைத் தொடர்ந்து அவர்கள் குடிநுழைவு விதிமீறல் குற்றத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர்,” என்று பினாங்கின் குடிநுழைவு இயக்குநர் நூர் சுல்ஃபா கூறினார்.
கைது செய்யப்பட்டவர்களின் வயது 40க்கும் 60க்கும் இடைப்பட்டது என்று தெரிவிக்கப்பட்டது. அவர்களில் இருவர் சிங்கப்பூர் பெண்கள். மற்ற நால்வரும் தைவானைச் சேர்ந்தவர்கள்.
தற்போது அந்த ஆறு பேர் மீதும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குடிநுழைவு விதிமீறல் குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவர்களுக்கு 6 மாதம் வரையிலான சிறைத் தண்டனை அல்லது 1000 ரிங்கிட் அபராதம் விதிக்கப்படலாம்.

