தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

அமெரிக்காவுடனான உறவைச் சரிசெய்ய காலம் ஆகும்: ர‌ஷ்யா

1 mins read
6931fffa-e22d-421f-a520-306198999f9c
கிரெம்ளின் பேச்சாளர் டிமிட்ரி பெஸ்கோவ். - படம்: ஏஎஃப்பி

மாஸ்கோ: ர‌ஷ்யாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான உறவைச் சரிசெய்ய காலம் ஆகும் என்று கிரெம்ளின் பேச்சாளர் டிமிட்ரி பெஸ்கோவ் கூறியுள்ளார்.

ர‌ஷ்யாவின் டாஸ் செய்தி நிறுவனத்துக்கு அவர் அளித்த நேர்காணலில் இடம்பெற்றுள்ள கருத்துகள் புதன்கிழமை (ஆகஸ்ட் 6) வெளியிடப்பட்டன.

“இந்த விவகாரத்தில் நடவடிக்கை ஏதும் எடுக்கப்படாமல் இருக்கிறது,” என்று டாசிடம் திரு பெஸ்கோவ் கூறினார். ர‌ஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டின், அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்புக்கு இடையே அதிக காலமாக சந்திப்பு ஏதும் நடக்காததை அவர் சுட்டிக்காட்டிப் பேசினார்.

“இருதரப்பு உறவை மீண்டும் சரியான பாதைக்குக் கொண்டுசெல்வதற்கு எடுக்கப்படும் முயற்சிகள் பலனளிக்க காலம் எடுக்கும்,” என்றும் அவர் விளக்கினார்.

இருநாட்டு அதிபர்களும் சந்திப்பு நடத்தி ஆறு மாதங்களுக்கு மேல் ஆகிவிட்டன. ர‌ஷ்யாவின் நவீன கால வரலாற்றில், புதிதாக ஒருவர் அமெரிக்க அதிபராகப் பொறுப்பேற்ற பிறகு இருநாட்டு அதிபர்களுக்கிடையே இத்தனை காலம் சந்திப்பு நடக்காமல் இருந்திருப்பது இதுவே முதல்முறை என்று டாஸ் குறிப்பிட்டது.

உக்ரேன் போரை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கில் வா‌ஷிங்டன் முயற்சி எடுத்துவருகிறது. அதன் ஓர் அங்கமாக அமெரிக்காவின் சிறப்புத் தூதர் ஸ்டீவ் விட்கோஃப் புதன்கிழமை மாஸ்கோவில் ர‌ஷ்யத் தலைவர்களைச் சந்திக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்