இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான், மருத்துவமனையில் சில மணிநேரங்கள் தங்கியிருந்த பிறகு மீண்டும் சிறைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
இத்தகவலை இம்ரான் கான் கட்சியின் செய்தித் தொடர்பாளர் வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 21) ஊடகங்களிடம் தெரிவித்தார்.
இந்த வாரம் பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவைத் தொடர்ந்து, மருத்துவப் பரிசோதனைக்காக இம்ரான் கான் வெள்ளிக்கிழமை அதிகாலை இஸ்லாமாபாத்தில் உள்ள ஒரு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.
ராவல்பிண்டியில் உள்ள அடியாலா சிறைக்கு இம்ரான் கான் கட்சியின் செய்தித் தொடர்பாளர் உறுதிப்படுத்தினார்.
இம்ரான் கான் 2003ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
தன் மீதான வழக்குகள் அரசியல் உள்நோக்கம் கொண்டவை என்று அவர் கூறி வருகிறார், ஆனால் அந்தக் குற்றச்சாட்டை அரசாங்கம் மறுக்கிறது.
சிறையில் இம்ரான் கானின் உடல்நிலை மோசமடைந்துள்ளதாகவும், அவரது வலது கண்ணில் பார்வை மிகவும் குறைந்துவிட்டதாகவும் அவருடைய வழக்கறிஞர்கள் கூறுகின்றனர்.
அதையடுத்து ஆகஸ்ட் 18ஆம் தேதி, “48 மணி நேரத்திற்குள் இம்ரான் கானை இஸ்லாமாபாத்தில் உள்ள ஷிஃபா சர்வதேச மருத்துவமனைக்கு மாற்ற வேண்டும், அவரது தனிப்பட்ட மருத்துவர் அடங்கிய மருத்துவக் குழு அவரைப் பரிசோதிக்க அனுமதிக்க வேண்டும்,” என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.


