மலேசியப் பெருஞ்செல்வந்தர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

மலேசியப் பெருஞ்செல்வந்தர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

1 mins read
9edd5963-b76e-4644-bec4-ead048fb2ccb
மலேசியப் பெருஞ்செல்வந்தர்களின் எண்ணிக்கை அடுத்த ஐந்தாண்டுகளில் 20.1 விழுக்காடு வளர்ச்சியைப் பதிவு செய்யும் என மதிப்பிடப்பட்டுள்ளது. - படம்: பெர்னாமா

கோலாலம்பூர்: நைட் ஃபிராங்கின் முக்கிய வெளியீடான ‘த வெல்த் ரிப்போர்ட்’ அறிக்கையின்படி, மலேசியப் பெருஞ்செல்வந்தர்களின் எண்ணிக்கை 2031ஆம் ஆண்டுக்குள் 39 விழுக்காடு ஏற்றம் காணும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மலேசியாவில் பெருஞ்செல்வந்தர்களின் எண்ணிக்கை அடுத்த ஐந்தாண்டுகளில் 20.1 விழுக்காடு வளர்ச்சியைப் பதிவு செய்யும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

அதாவது, 2026ல் 1,566ஆக இருக்கும் அவர்களின் எண்ணிக்கை 2031ல் 1,881ஆக உயரும் என அந்த அறிக்கை கூறுகிறது. இது கடந்த ஐந்தாண்டு (2021-2026) வளர்ச்சி விகிதமான 6.5 விழுக்காட்டைவிடக் கணிசமான அதிகரிப்பாகும்.

“உலகளாவிய நிச்சயமற்ற தன்மை மற்றும் எரிசக்தி விலை ஏற்ற இறக்கங்கள் இருந்தபோதிலும், நாட்டின் வலுவான பொருளியல் வளர்ச்சியே மலேசியப் பெருஞ்செல்வந்தர்களின் எண்ணிக்கை இந்த அதிகரிப்புக்குக் காரணமாகும். ரிங்கிட்டின் தொடர்ச்சியான நிலைத்த செயல்திறன் மற்றும் 2020ஆம் ஆண்டுமுதல் ஆண்டுக்கு ஆண்டு வளர்ந்துவரும் பங்குச்சந்தைப் பட்டியல்களுடன் கூடிய சுறுசுறுப்பான மூலதனச் சந்தை ஆகியவை இதற்கு ஆதரவளிக்கின்றன,” என்று நைட் ஃபிராங்க் மலேசியாவின் குழும நிர்வாக இயக்குநர் கீத் ஊய் செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 28) வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

குறிப்புச் சொற்கள்