சமயங்களைப் பின்பற்றாத தென்கொரிய இளைஞர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு: கருத்துக்கணிப்பு

சமயங்களைப் பின்பற்றாத தென்கொரிய இளைஞர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு: கருத்துக்கணிப்பு

1 mins read
eeeea218-4624-48f5-879f-a820bbea20c9
வயது முதிர்ந்தவர்களிடையே சமயத்தைப் பின்பற்றுவோரின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்துள்ளது. 2025ஆம் ஆண்டில், 30-39 வயதுடையவர்கள் 29 விழுக்காடு, 40-41 வயதுடையவர்கள் 39 விழுக்காடு, 50-51 வயதுடையவர்கள் 45 விழுக்காடு எனப் பதிவாகி உள்ளது. - படம்: ஏஎஃப்பி

சோல்: கெலப் கொரியா நடத்திய 2025ஆம் ஆண்டின் கருத்துக்கணிப்பின்படி, 20 வயதுக்கும் 30 வயதுக்கும் இடைப்பட்ட தென் கொரியர்களில் 24 விழுக்காட்டினர் மட்டுமே சமயத்தைப் பின்பற்றுவதாகக் கூறியுள்ளனர். இது 2004ஆம் ஆண்டில் இருந்த 45 விழுக்காட்டிலிருந்து கணிசமாகக் குறைந்துள்ளது.

1983 முதல் 2025 வரையிலான தென் கொரியாவின் மதம் குறித்த அறிக்கை, வயது வாரியாகப் பார்க்கும்போது இவ்வயதுப் பிரிவினர் ஒரு மதத்தைப் பின்பற்றுவதற்கான வாய்ப்பு மிகவும் குறைவு என்பதைக் காட்டுகிறது.

வயது முதிர்ந்தவர்களிடையே சமயம் பின்பற்றுவோரின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்துள்ளது. 2025ஆம் ஆண்டில், 30-39 வயதுடையவர்கள் 29 விழுக்காடு, 40-41 வயதுடையவர்கள் 39 விழுக்காடு, 50-51 வயதுடையவர்கள் 45 விழுக்காடு எனப் பதிவாகி உள்ளது.

சமயம் பின்பற்றுவோரை ஆக அதிகம் கொண்ட வயதுப் பிரிவினர் 60 வயதுக்கும் 70 வயதுக்கும் இடைப்பட்டோர் ஆவர். இந்த வயதினரில் பதிலளித்தவர்களில் கிட்டத்தட்ட 52 விழுக்காட்டினர் சமயத்தைப் பின்பற்றுவதாகக் கூறியுள்ளனர்.

சமயத்தைப் பின்பற்றுவதில் ஆர்வம் இல்லை என்று கருத்துக்கணிப்பில் பங்கேற்றவர்களில் 58 விழுக்காட்டினர் தெரிவித்தனர்.

20 விழுக்காட்டினர் தங்களுக்கு நேரமோ அல்லது அதற்குண்டான மனநிலையோ இல்லை என்றனர்.

9 விழுக்காட்டினர் சமயத்தின் மீதான ஏமாற்றமும் அவநம்பிக்கையுமே காரணம் என்றனர்.

9 விழுக்காட்டினர் ‘ஈன் மீது எனக்கு நம்பிக்கை உள்ளது’ என்று கூறியுள்ளனர்.

குறிப்புச் சொற்கள்