அதிகரிக்கும் மருத்துவச் சுற்றுலா: நோயாளிக்குத் தகுந்த தங்குமிடங்களைத் தேர்ந்தெடுக்க சோல் திட்டம்

அதிகரிக்கும் மருத்துவச் சுற்றுலா: நோயாளிக்குத் தகுந்த தங்குமிடங்களைத் தேர்ந்தெடுக்க சோல் திட்டம்

1 mins read
6f417033-b0c0-4eb8-8fe9-39217197620e
தென்கொரியாவில் 2025ஆம் ஆண்டில் மருத்துவ சிகிச்சை பெற்ற வெளிநாட்டு நோயாளிகளின் எண்ணிக்கை 71.9 விழுக்காடு உயர்ந்து 2.01 மில்லியனாகப் பதிவானது. - படம்: ஏஎஃப்பி

சோல்: தென்கொரியாவிற்கு மருத்துவச் சிகிச்சைக்காக வரும் வெளிநாட்டினரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

அதனையடுத்து, அவர்கள் நெடுநாள் தங்கி சிகிச்சை பெறுவதற்குத் தேவையான வசதிகள் கொண்ட ஹோட்டல்கள், தங்குமிடங்களைத் தேர்வு செய்யத் தொடங்கியுள்ளதாக ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 13) சோல் நகர அரசாங்கம் தெரிவித்தது.

சோல் மருத்துவ ஆதரவுத் தங்குமிடம் என்ற சான்றளிப்பைப் பெறுவதற்கு அந்நிலையங்கள் செப்டம்பர் 14ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சிகிச்சை பெறவரும் வெளிநாட்டினரும் அவரின் குடும்பத்தினரும் தங்குவதற்கு ஏற்ற இடங்களைக் கண்டறிய இது உதவும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தென்கொரியாவில் 2025ஆம் ஆண்டில் மருத்துவச் சிகிச்சை பெற்ற வெளிநாட்டு நோயாளிகளின் எண்ணிக்கை 71.9 விழுக்காடு உயர்ந்து 2.01 மில்லியனாகப் பதிவானது.

அதில் சோலில் மட்டும் 1.76 மில்லியன் பேர் சிகிச்சை பெற்றனர். 2026ஆம் ஆண்டு ஜூலையில் வெளிநாட்டினரின் மருத்துவச் செலவினம் $203 மில்லியனாக (213.1 பில்லியன் யுவான்) எட்டியது.

மருத்துவ ஆதரவுத் தங்குமிடம் எனும் அங்கீகாரத்தைப் பெற விரும்புவோர் சோலில் பதிவுசெய்யப்பட்ட தங்குமிடங்களைக் கொண்டிருக்க வேண்டும்.

மருத்துவமனைகளுக்கு அருகாமையில் இருப்பது, சக்கர நாற்காலி வசதி, 24 மணிநேர அவசரக்கால கட்டமைப்பு போன்ற வசதிகளின் அடிப்படையில் அவை மதிப்பீடு செய்யப்படும் எனக் கூறப்பட்டது.

குறிப்புச் சொற்கள்
தென்கொரியாமருத்துவம்சுற்றுலா