சுகாதாரப் பராமரிப்பு, பாரம்பரிய மருத்துவத்தில் ஒத்துழைப்பை வலுப்படுத்தும் இந்தியா, மலேசியா

சுகாதாரப் பராமரிப்பு, பாரம்பரிய மருத்துவத்தில் ஒத்துழைப்பை வலுப்படுத்தும் இந்தியா, மலேசியா

1 mins read
e805f198-4e26-4ed7-9e55-e64f14e881a3
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி (இடது), மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராகிம். - படம்: மலேசியப் பிரதமர் அலுவலகம்

புத்ராஜெயா: சுகாதாரப் பராமரிப்பு, பாரம்பரிய மருத்துவம் ஆகியவற்றில் இந்தியாவுக்கும் மலேசியாவுக்கும் இடையிலான பங்காளித்துவம் மறுஉறுதி செய்யப்பட்டுள்ளது.

கட்டுப்படியான விலை, எளிதில் கிடைக்கக்கூடிய, மக்களை மையமாகக் கொண்ட சுகாதாரப் பராமரிப்பை வலுப்படுத்த இருநாடுகளும் கொண்ட இலக்கை இந்த ஒத்துழைப்பு பிரதிபலிப்பதாக மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராகிமும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும் தெரிவித்தனர்.

“இந்தியத் தொழில்நுட்ப, பொருளியல் ஒத்துழைப்புத் திட்டத்தின்கீழ் மலேசியாவுக்குப் பாரம்பரிய இந்திய மருத்துவ நிபுணர்களைக் கொண்டு வரத் தேவையான ஏற்பாடுகளைச் செய்ய மலேசியா கடப்பாடு கொண்டுள்ளது. இதுகுறித்து இந்தியாவிடம் மலேசியா ஆலோசனை நடத்தி வருகிறது,” என்று மலேசிய வெளியுறவு அமைச்சு ஞாயிற்றுக்கிழமையன்று (பிப்ரவரி 8) அறிக்கை வெளியிட்டது.

மலேசிய சுகாதார அமைச்சின்கீழ் செயல்படும் குறிப்பிட்ட சில மருத்துவமனைகளில் பாரம்பரிய இந்திய மருத்துவச் சேவைகளைத் தொடர இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டது.

புத்தாக்கம், ஆய்வு, மக்களை மையமாகக் கொண்ட பங்காளித்துவம் ஆகியவை மூலம் வட்டார சுகாதார மீள்திறனை வலுப்படுத்த இந்தியாவும் மலேசியாவும் கடப்பாடு கொண்டுள்ளன.

குறிப்புச் சொற்கள்