தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

இந்தியா-பாகிஸ்தான் மோதல் எங்கள் பிரச்சினையன்று: ஜேடி வான்ஸ்

1 mins read
cb1f881e-d421-4e38-a32e-231a0cce0f69
இந்தியாவும் பாகிஸ்தானும் போர் பதற்றத்தைத் தணிக்க வேண்டும் என அமெரிக்கத் துணை அதிபர் ஜேடி வான்ஸ் கூறினார். - படம்: ராய்ட்டர்ஸ்

வாஷிங்டன்: இந்தியா - பாகிஸ்தான் இடையே நிலவும் போர் சூழல் அமெரிக்காவின் பிரச்சினை அல்ல என அந்நாட்டுத் துணை அதிபர் ஜேடி வான்ஸ் கருத்துரைத்துள்ளார்.

மேலும், இரு நாடுகளும் பதற்றத்தைத் தணிக்க வேண்டும் என ‘ஃபாக்ஸ் நியூஸ்’ செய்தி நிறுவனத்துக்கு வியாழக்கிழமையன்று (மே 8) அளித்த நேர்காணலில் அவர் வலியுறுத்தியுள்ளார்.

“அணுசக்தியில் பலம்வாய்ந்த இரு ஆசிய அண்டை நாடுகளை அமெரிக்காவால் கட்டுப்படுத்த முடியாது. இதில், நாங்கள் தலையிட முடியாது. இந்த மோதலை விரைவில் முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என்பதே எங்கள் விருப்பம்,” என அவர் கூறியுள்ளார்.

“பதற்றத்தைத் தணிக்க இரு தரப்பினரையும் ஊக்குவிக்க மட்டுமே எங்களால் முடியும். எங்களுக்குத் தொடர்பில்லாத போரில் தலையிடுவது எங்கள் வேலையன்று,” என அவர் தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா தொடர்ந்து இவ்விஷயத்தில் கவனம் செலுத்தும் எனக் கூறிய திரு ஜேடி வான்ஸ், இது ஒரு வட்டாரப் போராகவோ அணுசக்தி மோதலாகவோ மாறாது என்பதே எங்கள் நம்பிக்கை,” எனக் குறிப்பிட்டுள்ளார்.

குறிப்புச் சொற்கள்